- Advertisement -
Homeபொழுதுபோக்குகலவையான விமர்சனங்களை கடந்தும் விறுவிறுப்பான வசூலில் தங்கலான் - 5 நாட்களில் இத்தனை கோடி வசூலா?...

கலவையான விமர்சனங்களை கடந்தும் விறுவிறுப்பான வசூலில் தங்கலான் – 5 நாட்களில் இத்தனை கோடி வசூலா? – சியான் விக்ரம் நடிப்பே வேற லெவல்தான்!

- Advertisement -

நடிகர் விக்ரம் நடிப்பில் அசகாய சூரன் என்பதை அவர் நடித்த பல படங்களில் நிரூபித்து காட்டியவர். நடிகர் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக கதாபாத்திரத்துக்காக தன்னை வருத்திக்கொள்வதில், மெனக்கெடுவதில் விக்ரம் ஈடுபாட்டுடன் இருக்கிறார். அவரது கேரக்டர் அதனால்தால் எப்போதும் பேசப்படுகிறது.

குறிப்பாக காசி, சேது, அந்நியன், ஐ, ராவணன், பிதாமகன் உள்ளிட்ட படங்களில் சியான் விக்ரம், பல காட்சிகளில் ரசிகர்கள் திகைக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். காசி படம் பார்த்த ஒரு பெரியவர், தியேட்டரில் அருகில் அமர்ந்த படம் பார்த்த நடிகர் விக்ரமிடமே, கண்ணு தெரியாமலேயே இந்த பையன் எவ்வளவு அருமையான நடிச்சிருக்கார் பாருங்கன்னு பாராட்டினாராம். இதைக்கேட்டு விக்ரம் தேம்பி தேம்பி அழுதிருக்கிறார்.

- Advertisement -

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தங்கலான் படம் வெளியாகி, தியேட்டர்களில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் கதை வசனம் புரியவில்லை. கதையில் தெளிவு இல்லை, தங்கவயல் கொத்தடிமை தொழிலாளர் கதையை சரியாக பா ரஞ்சித் சொல்லவில்லை என்ற விமர்சனங்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன.

ஆனால் அதையும் தாண்டி விக்ரம் நடிப்பும், ஜிவி பிரகாஷ்குமார் இசையும் படத்துக்கு வலிமை சேர்த்திருக்கிறது. படத்தில் நடித்துள்ள பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோரின் நடிப்பு வேற லெவலில் இருந்து படத்துக்கு இன்னும் நல்ல ரிசல்ட்டை கொடுத்திருக்கிறது. ஆனால் இயக்குனர் பா ரஞ்சித், தனது குறியீடுகளுக்கு முக்கியத்துவம் தராமல் படத்தின் கதைக்கு முக்கியத்துவம் தந்திருக்க வேண்டும் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.

- Advertisement -

எனினும் பா ரஞ்சித் கடந்தும், சியான் விக்ரம் நடித்த படம் என்ற கோணத்தில் தங்கலான் படம் பார்க்க ரசிகர்கள் அதிகளவில் தியேட்டர்களுக்கு வருகின்றனர். எனினும் படத்தின் கதை வசனம் புரியாமல் பல இடங்களில் ரசிகர்கள் குழப்பமடைகின்றனர். சப் டைட்டில் போட்டிருந்தால் இந்த குழப்பம் வராது என்றும் பலர் கூறுகின்றனர்.

இதற்கிடையே தங்கலான் வசூல் நிலவரம் தகவல் வெளிவந்துள்ளது. கடந்த வியாழன் அன்று சுதந்திர தின நாளில் தங்கலான் படம் வெளியானது. கடந்த 5 நாட்களில் தங்கலான் படம் உலகம் முழுவதும் ரூ. 57 கோடியை கடந்துள்ளது. படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் ரூ. 57 கோடி வசூலை கடந்துள்ளதால், இன்னும் ஒரு வாரத்திற்குள் ரூ. 100 கோடி இலக்கை எட்டிவிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்