- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு ஊரே திரண்டு வந்துவிட்டதே… நடிகர் ராகவா லாரன்ஸ்சை நேரில் சந்தித்த கிராம மக்கள்...

இப்படி ஒரு ஊரே திரண்டு வந்துவிட்டதே… நடிகர் ராகவா லாரன்ஸ்சை நேரில் சந்தித்த கிராம மக்கள் – தரமான சம்பவத்தை சத்தமில்லாமல் பண்ணிட்டு போயிட்டாங்களே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக தனது பயணத்தை துவங்கியவர் ராகவா லாரன்ஸ். பிறகு டான்ஸ் மாஸ்டராக மாறி பல ஹீரோக்களை ஆட வைத்தார். அதைத் தொடர்ந்து அமர்க்களம் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றி அவரே அசத்தலான நடனமாடினர். பிறகு நடிகராக மாறிய அவர் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

நடன கலைஞராக, நடன இயக்குனராக நடிகராக மட்டுமின்றி ராகவா லாரன்ஸ்சை தமிழக மக்கள் கொண்டாட காரணம் அவரது உதவும் குணம்தான். கஷ்டம் என்று தெரிந்துவிட்டால் அவர்களுக்கு தேடிச் சென்று உதவும் வள்ளல் குணம் அவரிடம் நிறைய இருக்கிறது. இதுவரை ஏராளமான உதவிகளை செய்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த 2 ஆண்டுகளாக அவர் மாற்றம் என்ற சேவை அமைப்பை துவங்கி அதன்மூலமாக பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். சமீபத்தில் ஒரு பெண், மண்ணில் டப்பாவில் போட்டு மூடிவைத்த 1 லட்சம் ரூபாயை மண் அரித்துவிட்டது. பணத்தை இழந்து தவித்த அந்த பெண்ணை தனது அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து அவர் இழந்த 1 லட்சம் ரூபாயை வழங்கியவர் ராகவா லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாற்றம் என்ற சேவை அமைப்பை துவங்கியவுடன், ராகவா லாரன்ஸ் தனது சொந்த செலவில் 11 டிராக்டர்களை இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கினார். இதில் ஒரு டிராக்டர் மட்டும் நடிகர் எஸ்ஜே சூர்யா வழங்கியது. இந்த டிராக்டர்களை பெற்றுக்கொண்டு அதை பயன்படுத்திய விவசாயிகள் செய்த ஒரு தரமான சம்பவம் சமீபத்தில் நடந்திருக்கிறது.

- Advertisement -

அதாவது ராகவா லாரன்ஸ் இலவசமாக வழங்கிய டிராக்டர்களை பயன்படுத்தி விவசாயம் செய்த கிராம மக்கள், அங்கு உற்பத்தியான காய்கறிகள் பழங்கள் நெல் கம்பு நிலக்கடலை உள்ளிட்ட தானிய வகைகளை நேரில் கொண்டு வந்து மாஸ்டர் ராகவா லாரன்ஸிடம் நேரில் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விவசாயிகள் தங்கள் குடும்பங்களோடு வந்து இவைகளை அன்பளிப்பாக வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அவற்றை சந்தோஷமாக பெற்றுக்கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், அவர்கள் தந்த காய்கறிகள் நெல் கம்பு வேர்க்கடலை போன்ற தானியங்களை கையில் வாங்கிய போது ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. இன்னும் நிறைய விவசாயிகளுக்கு செய்ய வேண்டும் என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியுள்ளது என்று நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்