- Advertisement -
Homeபொழுதுபோக்குரவி மோகன் இயக்கத்தில் நான் நடிக்கும் திரைப்படம் இப்படித்தான் இருக்கும்... சூப்பராக சொன்ன யோகி பாபு......

ரவி மோகன் இயக்கத்தில் நான் நடிக்கும் திரைப்படம் இப்படித்தான் இருக்கும்… சூப்பராக சொன்ன யோகி பாபு… இப்போதே காத்திருப்பு அதிகரிப்பு…

- Advertisement -

தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்த ஜெயம் ரவி, அண்மையில் தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றினார். அவருக்கு சமீப காலமாகவே, தோல்வி திரைப்படங்கள் துரத்தி வருகின்றன. கோமாளி தான் அவருக்கு பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதன் பிறகு நடித்த பூமி போன்ற திரைப்படங்கள் பெரிய அளவு சக்சஸ் ஆகவில்லை.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து ஓரளவு கவனத்தைப் பெற்றார் ரவி மோகன். ஆனால் அதன்பிறகு வெளியான அகிலன், இறைவன், சைரன் மற்றும் பிரதர் ஆகிய திரைப்படங்கள் இங்கு வந்தது கூட பலருக்கு தெரியாது. கடைசியாக அவர் காதலுக்கு நேரமில்லை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இதனை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்றது. ஆனால் ரசிகர்களிடம் அது போய் சேரவில்லை என்றுதான் கூற வேண்டும். இப்படியான சூழலில் ரவி மோகன் தற்போது தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் அவர் ஜீனி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமான முறையில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட மூன்று ஹீரோயின்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஃபேண்டஸி படமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் படத்தில் போஸ்டர் வந்ததோடு சரி அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவே இல்லை. இதுபோக சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா கூட்டணியில் எடுக்கப்படும் பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமாகதான்.

- Advertisement -

கராத்தே பாபு என்னும் திரைப்படத்திலும் ரவி மோகன் நடித்து வருகிறார். டாடா திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர்தான் இந்த திரைப்படத்தை எடுத்து வருகிறார். இதன் டீசரே பலரும் பாராட்டும் வகையில் அமைந்தது. முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது.

இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க தற்போது நடிப்பில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வரும் ரவி மோகன், அடுத்ததாக ஒரு திரைப்படத்தை இயக்கவும் இருக்கிறார். யோகி பாபுவை வைத்து தான் அவர் ஒரு கதையை எழுதி இருக்கிறார். இதனை யோகிபாபுவும் உறுதி செய்துள்ளார். குடும்பங்கள் கொண்டாடும் மிக ஜாலியான திரைப்படமாக இது இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்