- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோவில் வந்த வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்... அப்போது விட்டுவிட்டு, இப்போது கதறி என்னையா பிரயோஜனம்...

லியோவில் வந்த வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்… அப்போது விட்டுவிட்டு, இப்போது கதறி என்னையா பிரயோஜனம்…

- Advertisement -

செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷால். முதல் திரைப்படத்திலேயே, ஓரளவு கவனிக்கப்பட்ட நடிகர், அடுத்தடுத்த திரைப்படங்களில் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று நடிகருக்கு திருப்புமுனையை கொடுத்தது.

தமிழ் சினிமா இதுவரை பார்க்காத மாறுபட்ட கதைகளத்தில், விறுவிறுப்பான திரைக்கதையை கொடுத்து அசத்தியிருந்தார் இயக்குனர் லிங்குசாமி. இரண்டாம் பாதியில் விஷாலுக்கு நிகராக ராஜ்கிரண் கதாபாத்திரம் எழுதப்பட, படத்திற்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்கள் ஏ பி சி என மூன்று சென்டர்களிலும் சண்டக்கோழியை ஹிட் அடிக்க செய்தனர்.

- Advertisement -

இதன் பிறகு திமிரு, தாமிரபரணி என விஷாலின் திரை உலக பயணம் ஜோராக அமைந்தது. அதிலும் தாமிரபரணி திரைப்படம், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக உருவானதால் விஷால், முக்கிய நடிகர்களின் பட்டியலில் இணைந்தார்.

இதன்பிறகு மலைக்கோட்டை, சத்யம், தோரணை, வெடி, சமர், பட்டத்து யானை என விஷால் தொட்ட படங்கள் அனைத்தும் தோல்வியை கொடுத்தன. அவன் இவன் திரைப்படத்தில் விஷால் நடிப்பு பேசப்பட, பாண்டிய நாடு, இரும்புத்திரை உள்ளிட்ட படங்கள் அவருக்கு கம்பேக்கை கொடுத்தது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக ஒரு வெற்றியைக் கூட கொடுக்க முடியாமல் விஷால் தவித்து வருகிறார்.

- Advertisement -

அயோக்யா, ஆக்சன், சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி என அடுத்தடுத்த திரைப்படங்கள் அனைத்தும் வந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. இதனால் வருத்தத்தில் இருக்கும் விஷால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தையே நம்பி இருக்கிறார். இதன் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பேசி இருக்கும் விஷால், தனக்கு இயக்கத்தின் மீது எப்போதும் ஆர்வம் இருப்பதாகவும், விஜய்யை வைத்து படம் எடுக்க ஆசை என்றும் கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “லியோ திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்காக நான்கு மாதங்கள் அர்ப்பணிக்க வேண்டும் என்று லோகேஷ் என்னிடம் கூறினார். ஆனால் அப்போது நான் பல வேடங்களில் திரைப்படம் நடித்துக் கொண்டிருந்ததால் என்னால் லியோவில் நடிக்க முடியாமல் போனது. நான் லோகேஷிடம் மன்னிப்பு கேட்டேன். அதேபோல் விஜய் வைத்து லோகேஷ் இயக்குவதால் அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறினேன். ஒரு நாள் நிச்சயம் நான் விஜய் வைத்து படம் இயக்குவேன்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

சற்று முன்