- Advertisement -
நான்தான் தமிழ்நாட்டின் நடிப்பு அரக்கன் என்று நடிகர் திலகம் சிவாஜி போல் நடிப்பதாக கோமாளித்தனமாக செய்து காட்டி ரசிகர்களை சிரிக்க வைப்பவர் வாட்டர்மெலன் திவாகர். இதுகுறித்து சமீபத்தில் இயக்குனர் சேரன் விமர்சித்து இருந்தார். சிவாஜி நடிப்புடன் உங்களை ஒப்பிடலாமா? என்றும் கண்டித்து இருந்தார். இதற்கு பதில் தந்த வாட்டர்மெலன் கூறியதாவது, சேரன் சாருக்கு என் நடிப்பை பார்த்து வயிறு எரியுது. என்னை சிவாஜியுடன் ஒப்பிடக் கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்குது? எப்படியும் உங்களுக்கு படம் எதுவும் இல்லாமல் சும்மாதான் இருக்கீங்க. அதனால போய் அதை பாருங்க. என் நடிப்பை பார்த்து பொறாமை படாதீங்க என்று வாட்டர் மெலன் திவாகர் சீரியஸாக கூறியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு குபீர் சிரிப்பை வரவழைத்துள்ளது.





