- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்திய திரை உலகில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் தொட்ட திரைப்படங்கள் எதெல்லாம் தெரியுமா... புருவத்தை...

இந்திய திரை உலகில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் தொட்ட திரைப்படங்கள் எதெல்லாம் தெரியுமா… புருவத்தை உயர்த்த வைக்கும் புது லிஸ்ட் ரெடி…

- Advertisement -

ஒரு காலத்தில் திரைப்படங்கள் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது என்றால், அது 50 நாட்கள், 100 நாட்களைக் கடந்தும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்படும். இருப்பினும் அதன் வசூல் கோடி ரூபாயை தொடுவதை மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும்.

ஆனால் இப்போது கால மாற்றத்திற்கு ஏற்ப படத்தின் வசூலும், கோடியில் புரள ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமின்றி 50 நாட்கள், 100 நாட்கள் ஓடிய காலமெல்லாம் மாறிப் போய், ஒரே வாரத்தில் படத்தின் வசூல் முடிவுக்கு வந்து விடுகிறது. விமர்சனத்தை எல்லாம் தாண்டி முக்கிய நட்சத்திரங்களை போட்டு குப்பை படத்தை எடுத்தாலும், அதன் வசூல் எகிறி வருகிறது.

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்பு, 100 கோடி ரூபாய் வசூல்தான் ஒரு படத்தின் மிகப்பெரிய சாதனையாக இருந்து வந்தது. இந்தத் தியரியை உடைத்து காட்டியது, ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம் தான். குறிப்பாக மிகப்பிரமாண்டமாக எடுக்கப்பட்ட அந்தப் படத்தின் இரண்டாம் பாகம், பெரிய அளவில் பேசப்பட்டது.

தெலுங்கு திரையுலகையும் தாண்டி தமிழ் ஹிந்தி கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகளையும் பாகுபலி ஹிட் அடித்தது. இது மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் பாகுபலி பரபரப்பாக பேசப்பட யாருமே எதிர்பார்க்காத வகையில் அதன் வசூல் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டியது. மாதக்கணக்கில் ஓடிய இந்த திரைப்படம், ஒட்டுமொத்தமாக 1810 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

- Advertisement -

இதே போல் இந்தி திரை உலகில் அமீர்கான் நடித்த தங்கள் திரைப்படமும், ஆயிரத்தை கடந்து 2024 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது. ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படம் 1258 கோடி ரூபாயும், கே ஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகம் 1250 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளன. திரையுலகை பொருத்தவரை நடிகர் சாருக் கானுக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

அவர் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான பதான் திரைப்படம், 1050 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த வரிசையில் ஜவான் திரைப்படமும் இணைந்துள்ளது. வழக்கம்போல் பிறமொழிக் காட்சிகளை சுட்டு வைத்து அட்லி படத்தை ஒப்பேற்றினாலும், பாலிவுட்டிற்கு அது புதியது என்பதால் ஜவான் வசூல் மழை குவித்து வருகிறது. தனது 7 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இன்னும் தமிழ் படம் ஒன்று கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்