- Advertisement -
Homeபொழுதுபோக்குபைக்கை மையப்படுத்தி தனது முதல் படத்தை இயக்கிய வெற்றிமாறன், பொல்லாதவனுக்கு பின்னால இப்படி ஒரு கதை...

பைக்கை மையப்படுத்தி தனது முதல் படத்தை இயக்கிய வெற்றிமாறன், பொல்லாதவனுக்கு பின்னால இப்படி ஒரு கதை இருக்குதா? – இது வேற லெவல் ப்ரோ…!

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்துமே பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்பட்வை. அவர் இயக்கிய முதல் படம் பொல்லாதவன். இந்த படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ஆடுகளம் அசுரன் விசாரணை வடசென்னை விடுதலை ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறன், இப்போது விடுதலை 2 படத்தை டைரக்ட் செய்துள்ளார். வருகிற 20ம் தேதி விடுதலை 2 படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் டைரக்ட் செய்ய இருக்கிறார். அதற்கான ஸ்கிரிப்ட் பணிகளை அவர் விரைவில் தொடங்க உள்ளார்.

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் ஆரம்பத்தில் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். பொதுவாக இலக்கியம் சார்ந்த விஷயங்களை, தமிழ் சார்ந்த படைப்புகளை தனது படங்களாக உருவாக்குவதில் அதிக அக்கறையும் ஆர்வம் கொண்டவர். ஆனால் வெற்றிமாறன் இயக்கிய முதல் படம் பொல்லாதவன் கமர்ஷியலாக, காதல் மற்றும்ஆக்சன் படமாக இருந்தது.

நாயகனாக தனுஷ் நடித்த இந்த படத்தில், வேலையில்லாமல் உள்ள தனுஷ் ஒரு கட்டத்தில் புதிய பைக் வாங்கிய பிறகு வேலை கிடைத்துவிடும். பல ஆண்டுகளாக காதலித்த காதலியும் ஓகே சொல்லிவிடுவார். சந்தோசமான வாழ்க்கையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென அவரது பைக் காணாமல் போகும்.

- Advertisement -

அதன் பிறகு வேலையும் அவருக்கு போய்விடும். காதலியும் அவர் காதலையும் மறுத்து விட்டு போய்விடுவார். இப்படி பைக் இருக்கும்போது ஒரு கதாநாயகன் சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதும், அந்த பைக்கை பறிகொடுத்து இழந்த பிறகு அவன் வாழ்க்கையில் பல துன்பங்களையும் ஏமாற்றங்களையும் சந்திப்பதையும் மையப்படுத்தி பொல்லாதவன் படத்தை வெற்றிமாறன் உருவாக்கி இருந்தார். தனது முதல் படத்தை பைக்கை மையப்படுத்தி அவர் இயக்க காரணம் இதுதான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் வெற்றிமாறனின் மனைவி ஆர்த்தி ஒரு நேர்காணலில் கூறும்போது, நான் வெற்றிமாறனை காதலிக்கும் போது, வீட்டுக்கு தெரியாமல் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து, ஆர்எக்ஸ் 100 பைக் நான்தான் முதன்முறையாக வாங்கி கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார். தன் மனைவி ஆர்த்தி, காதலியாக இருந்த போது வாங்கி கொடுத்த பைக்கை மையப்படுத்திதான் பொல்லாதவன் படத்தை வெற்றிமாறன் இயக்கினாரா, அந்தப் பின்னணியில் தான் இந்த படத்தை உருவாக்கினாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்