- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா, இப்போது எப்படி இருக்கிறார்? - சூர்யாவே வெளியிட்ட...

கங்குவா படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா, இப்போது எப்படி இருக்கிறார்? – சூர்யாவே வெளியிட்ட உருக்கமான பதிவு

- Advertisement -

நடிகர் சூர்யா இப்போது கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இன்னும் சில முக்கிய காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட வேண்டியுள்ளது. கடந்த மாதம் முழுவதும் தாய்லாந்து நாட்டில் ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மும்பை, ஐதராபாத், கொடைக்கானலை தொடர்ந்து தாய்லாந்து நாட்டில் படப்பிடிப்பை நடத்தினார். இந்த படத்தில் கலை இயக்குநராக பணிபுரிந்த மிலன் இறந்த நிலையில், அவரது மனைவி மரியா, தொடர்ந்து கலை இயக்குநராக பணிசெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்போது சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் மீதமுள்ள கங்குவா படக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இங்கும் சண்டை காட்சிகள்தான் எடுக்கப்படுகின்றன. முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்பதால் பெரும்பாலும் சண்டை காட்சிகளே அதிகமாக படமாக்கப்படுகினறன.

நேற்று கங்குவா படப்பிடிப்பு நடந்த போது சண்டை காட்சியில் சூர்யா நடித்துக்கொண்டு இருந்தார், மேலே 10 அடி உயரத்தில், கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த படம்பிடித்துக்கொண்டு இருந்த கேமரா ஒன்று, திடீரென அறுந்து விழுந்தது. சட்டென சூர்யா நகர்ந்துவிட்ட நிலையில், இடுப்பில் கேமரா பட்டு லேசான காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்ததில் லேசான அடிதான் என்றும், மாத்திரைகள், ஆயின்மெண்ட்டும் தரப்பட்டுள்ளது. இதையடுத்து, படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளாமல் சூர்யா, வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தனது டிவிட்டர் எக்ஸ் பக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு பதிவிட்டுள்ளார். அதில், நண்பர்கள், நலம் விரும்பிகள், என் அன்பான ரசிகர்களே, விரைவில் குணமடையுங்கள் என குறுஞ்செய்தி அனுப்பிய அனைவருக்கும் என் நன்றி. நான் நன்றாக இருக்கிறேன். உங்களின் அன்புக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்