- Advertisement -
Homeபொழுதுபோக்குஅர்ஜூன் நடித்த சூப்பர்ஹிட் படம் ஏழுமலை, 2ம் பாகமாக உருவாகிறது, டைரக்ட் செய்து தயாரிப்பது நம்ம...

அர்ஜூன் நடித்த சூப்பர்ஹிட் படம் ஏழுமலை, 2ம் பாகமாக உருவாகிறது, டைரக்ட் செய்து தயாரிப்பது நம்ம ஆக்‌ஷன்கிங் தான் – படத்தோட ஹீரோ யார் தெரியுமா? – போடு வெடிய…

- Advertisement -

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதமான நடிகர்களில் ஒருவர்தான் அர்ஜூன். ராமநாராயணன் இயக்கத்தில் நன்றி என்ற படத்தில் அறிமுகமான நடிகர் அர்ஜூன், இன்றும் 61 வயதிலும் தமிழ் சினிமாவில் பரபரப்பாக நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்த இந்த திரைக்கலைஞர் தேசப்பற்று மிக்கவர். தன் கையில் தேசியக்கொடியை பச்சை குத்திக் கொண்டவர்.

தமிழ் சினிமாவில் நாட்டுப்பற்று படங்களில் நடிப்பது என்றால் நடிகர் அர்ஜூனுக்கு மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட நல்ல படங்களில் நடிக்க சம்பளம் கூட வாங்க மாட்டார். அல்லது மிக குறைந்த சம்பளம் மட்டுமே வாங்குவார். சில நேரங்களில் அத்தகைய படங்களை அவரே தயாரிக்கவும் ஆர்வம் காட்டுவார். சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் தேசப்பற்று மிக்க ஒரு கலைஞர். இவரை போலவே தேசப்பற்று படங்களில் நடித்த மற்றொரு கலைஞர் கேப்டன் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் அர்ஜூன் ஆரம்பத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நடிப்பு பயணத்தில் படிப்படியாக முன்னுக்கு வந்தவர். அதிரடி சண்டைக்காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து நடிப்பவர். முறையாக சண்டைப் பயிற்சி கற்றவர். கராத்தே, குங்பூ என முறையாக தற்காப்பு கலைகளை பயின்றவர் என்பதும் கவனிக்கத்தக்கது.

இவரது நடிப்பில் வெளியான ஜெண்டில் மேன், முதல்வன், சேவகன், செங்கோட்டை, ஜெய்ஹிந்த் என பல படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. கமல்ஹாசனுடன் அர்ஜூன் இணைந்து நடித்த குருதிப்புனல் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

சமீபத்தில் இவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது. தனது மகள், தம்பி ராமையா மகன் உமாபதியை காதலிப்பதை அறிந்த நிலையில், இருவருமே கலந்து பேசி இருதரப்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் இந்த திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.

தனது மருமகன் உமாபதி மீது அதிக அன்பும், மரியாதையும் வைத்துள்ள மாமனார் அர்ஜூன், ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். அதன்படி அர்ஜூன் சிம்ரன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் ஏழுமலை. இந்த படத்தை 2ம் பாகமாக அர்ஜூன் டைரக்ட் செய்து அவரே பலகோடிகள் பட்ஜெட்டில் தயாரிக்கவும் செய்கிறார். இதில் ஹீரோவாக நடிக்கப் போவது அவரது மருமகன் உமாபதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்