நடிகர் யோகிபாபு தமிழ் சினிமாவில் துவக்கத்தில் துணை நடிகராக தான் நடித்துக்கொண்டு இருந்தார். கூட்டத்தில் ஒருவராக ஸ்கிரீனில் தெரிந்தார். ஆரம்பத்தில் அவருக்கு பெயரோ, கேரக்டரோ, வசனம் கூட பெரும்பாலும் இருக்காது. பிறகு படிப்படியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நடிகராக மாறினார்.
முதலில் அவருக்கு காமெடி ரோல்கள்தான் சின்ன சின்ன அளவில் கிடைத்தன. அதிலும் காக்கா முட்டை படத்தில், எனக்கே விபூதி அடிச்சிட்டே இல்லே நீ என்று ராம்திலக்கிடம் அவர் பேசும் வசனம்தான் பெரிய அளவில் டிரண்டிங் ஆனது. தொடர்ந்து பல படங்களில் நடித்தவர். தர்பார் படத்தில் ரஜினியுடன் காமெடி பண்ணும் அளவுக்கு உயர்ந்தார்.
அடுத்து மண்டேலா படத்தில், கதையின் நாயகனாக நடித்து மக்களிடம் மனம் கவர்ந்தார். எமதர்மராஜா கூர்க்கா போன்ற படங்களும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல இமேஜை பெற்றுத் தந்த நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார். இப்போதைய சூழலில் தமிழில் யோகிபாபுக்கு நிறைய படங்கள் கைவசம் இருக்கின்றன.
இதற்கிடையே சமீபத்தில் தனது மேக்கப் மேன் சம்பளத்தில், தினமும் அவருக்கு வழங்கப்பட்ட 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், 3 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு, தினமும் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் யோகிபாபு ஆட்டைய போட்ட விஷயம், சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதில் யோகிபாபு ஒரு நாள் சம்பளம் ரூ. 11 லட்சம். அத்துடன் ரூ 5 ஆயிரம் இப்படி எடுத்திருக்கிறார்.. இதனால் அந்த மேக்கப்மேன் வெறுத்துப்போய் வேலையை விட்டே சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழில் ஏகப்பட்ட படங்களில் யோகிபாபு நடிக்க கமிட் ஆகியுள்ள நிலையில் இதில் சில படங்களில் காமெடி ரோல்களிலும், சில படங்களில் ஹீரோவுக்கு இணையாகவும், சில படங்களில் ஹீரோவாகவும் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இடைவெளியே இல்லாத அளவுக்கு அவருக்கு படங்கள் கையில் இருந்தும் இப்போது அவர் திடீரென ஒரு முடிவுக்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.
அதாவது தெலுங்கு படம் ஒன்றில், பிரபாஸ் நடிக்கும் படத்தில் காமெடி ரோலில் நடிக்க யோகிபாபுவுக்கு அழைப்பு வந்திருக்கிறது. பிஸி ஷெட்யூலில் இருந்தாலும் உடனே யோகிபாபு ஓகே சொல்லி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் தமிழில் பெறும் சம்பளத்தை விட இந்த படத்தில் 3 மடங்கு சம்பளம் அதிகமாம். பான் இந்தியா படம் என்பதால், தமிழை காட்டிலும் தெலுங்கு படம் பெஸ்ட் என்ற முடிவுக்கு வந்துவிட்ட யோகிபாபு, தமிழ் படங்களில் நடிப்பதை ஒதுக்கி வைத்துவிட்டு தெலுங்கு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.





