- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்திடம் அனுமதி கேட்ட இளம் நடிகர் - சூப்பர் ஸ்டார்...

விஜயகாந்த் படத்தில் நடிக்க நடிகர் ரஜினிகாந்திடம் அனுமதி கேட்ட இளம் நடிகர் – சூப்பர் ஸ்டார் அப்போ என்ன சொன்னார் தெரியுமா?

- Advertisement -

கடந்த 1993ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் கதை திரைக்கதை எழுதி சொந்தமாக தயாரித்த படம் வள்ளி. இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்தின் நண்பர் இயக்குனர் கே நடராஜ் டைரக்ட் செய்திருந்தார். பிரியா ராமன் சஞ்சய் பார்கவ் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ரஜினிகாந்த் இந்த படத்தில் வீரையன் என்ற கேரக்டரில் கேமியோ ரோலில் சில காட்சிகளில் நடித்திருந்தார்.

இளம் நடிகர் சஞ்சய் பார்கவ் மற்றும் புதுமுக நடிகை பிரியாராமன் என இருவருக்குமே இதுதான் முதல் படம். வள்ளி கேரக்டரில் பிரியாராமன், சேகர் என்ற கேரக்டரில் சஞ்சய் பார்கவ் நடித்திருந்தனர். வள்ளியும் சேகரும் காதலிப்பார்கள். ஆனால் சேகர் வள்ளியை கெடுத்து ஏமாற்றிவிட்டு சென்னைக்கு தப்பிச் சென்று விடுவார். அதன்பிறகு வள்ளி என்ன முடிவு செய்தாள் என்பதுதான் வள்ளி படத்தின் கதை.

- Advertisement -

இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பிரியா ராமன் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். நடிகர் வடிவேலுவுக்கும் இந்த படம் நல்ல அடையாளத்தை கொடுத்தது. குறிப்பாக வள்ளி வரப் போறா துள்ளி வரப்போறா, என்ன என்ன கனவு கண்டாயோ சாமி போன்ற பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. இந்த படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்து இருந்தார்.

வள்ளி படத்தில் சேகர் கேரக்டரில் நடித்த சஞ்சய் பார்கவுக்கு பெரிய அளவில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் அவருக்கு நடிகர் விஜயகாந்துடன் ஒரு படத்தில் கிடைக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 1994ம் ஆண்டில் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் பி வாசு இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த படம் சேதுபதி ஐபிஎஸ் படம் உருவானது.

- Advertisement -

இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க சஞ்சய் பார்கவுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் இந்த படத்தில் சின்ன கேரக்டராக இருக்கிறதே, இதில் நடிக்கலாமா வேண்டாமா என்ற சந்தேகத்துடன் சஞ்சய் பார்கவ், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசி உள்ளார். அப்போது ரஜினிகாந்த், இதுபோன்ற வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள். ஏவிஎம் படம், பி வாசு டைரக்சன், விஜயகாந்த் படம், இதுபோன்ற வாய்ப்பு கிடைக்காது, பயன்படுத்திக்கொள் என்று கூறியிருக்கிறார்.

அதன்பிறகு தான் சேதுபதி ஐபிஎஸ் படத்தில் நடிக்கிறேன் என்று சஞ்சய் பார்கவ் சம்மதம் சொல்லி இருக்கிறார். இந்த படத்தில் காத்து நடை சாத்து என்ற பாடலில் நடிகை மீனாவுடன் சேர்ந்து தனக்கு நடனமாடும் வாய்ப்பு கிடைத்ததாக நடிகர் சஞ்சய் பார்கவ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசயி போது கூறியிருக்கிறார். வள்ளி படத்தில் நடித்த நடிகை பிரியாராமன் பல படங்களில் நடித்து பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். ஆனால் வள்ளி படத்தில் நடித்த சஞ்சய் பார்கவ் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளின்றி தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பிரகாசிக்க முடியாமல் போய்விட்டது.

- Advertisement -

சற்று முன்