- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 68 திரைப்படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்களா? அதுவும் அந்த மியூசிக் டைரக்டரா? என்னப்பா புதுசா இருக்கு

தளபதி 68 திரைப்படத்திற்கு இரண்டு இசையமைப்பாளர்களா? அதுவும் அந்த மியூசிக் டைரக்டரா? என்னப்பா புதுசா இருக்கு

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் எவ்வளவு ஆவலாக இருக்கிறார்களோ அதே அளவுக்கு “தளபதி 68” திரைப்படத்திற்கும் ஆவலோடு இருக்கிறார்கள்.

விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்ற செய்தி பலரும் அறிந்ததே. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால், “தளபதி 68” திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பதுதான்.

- Advertisement -

யுவன் ஷங்கர் ராஜா, விஜய் திரைப்படங்களுக்கு அவ்வளவாக இசையமைத்தது இல்லை. “வேலை” என்ற ஒரு திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா விஜய்யை ஒரு பாடல் பாட வைத்திருக்கிறார். அதனை தொடர்ந்து “புதிய கீதை” திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

அதன் பின் விஜய்-யுவன் காம்போ இணையவே இல்லை. இந்த நிலையில்தான் தற்போது இந்த காம்போ கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பின் இணைந்துள்ளது. ஆதலால் விஜய் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது “தளபதி 68” திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவோடு இணைந்து கூடுதலாக ஒரு இசையமைப்பாளர் இசையமைக்க உள்ளார் என்று சில பேச்சுக்கள் அடிபடுகின்றன.

அதாவது இசையமைப்பாளர் தமன் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரியங்கா, தமனின் அடுத்த புராஜெக்ட் குறித்து விசாரித்தார்.

அதற்கு தமன், “யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து ஒரு பெரிய புராஜெக்ட்டில் பணியாற்றப்போகிறேன்” என கூறினார். அப்போது பிரியங்கா, “தளபதி 68 தானே” என்று கேட்டார். ஆனால் தமன் அதற்கு சரியான பதிலை கூறவில்லை. இதனை தொடர்ந்து “தளபதி 68” திரைப்படத்திற்கு தமனும் இசையமைக்கிறார் என்று செய்திகள் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்