- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் டைரக்டராக மாறும் யுவன் சங்கர் ராஜா, அவர் டைரக்ட் செய்யும் படத்தின் ஹீரோ...

விரைவில் டைரக்டராக மாறும் யுவன் சங்கர் ராஜா, அவர் டைரக்ட் செய்யும் படத்தின் ஹீரோ யார் தெரியுமா? போட்றா வெடிய – ஆரம்பமே வேற லெவலா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசை சக்கரவர்த்தியாக வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என 3 பேர் பிள்ளைகள் என்ற நிலையில், மகள் பவதாரணி சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மறைந்தார். மூத்த மகன் கார்த்திக் ராஜா ஆரம்பத்தில் சில படங்களுக்கு இசையமைத்த நிலையில், இப்போது அப்பாவுக்கு உதவியாக இருந்து வருகிறார்.

ஆனால் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா, தமிழில் பல படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் விஜய் நடித்த தி கோட் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார். மேலும் வெளிநாடுகளில் பல இசை நிகழ்ச்சிகளை அவர் அடிக்கடி நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்ககது.

- Advertisement -

இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் இசையமைப்பாளராக மட்டுமின்றி தயாரிப்பாளராக, பாடகராக, கவிஞராக, இயக்குனராகவும் இருக்கிறார். அவரது இயக்கத்தில் வெளியான படம்தான் கரகாட்டக்காரன். ராமராஜன் கனகா, கவுண்டமணி – செந்தில், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்த கரகாட்டக்காரன் படம் எப்போதும் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கிறது. ரசிகர்களால் இப்போதும் கொண்டாடும் படமாகவும் இருக்கிறது.

கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு, துவக்கத்தில் சில படங்களில் நடித்தார். நடிப்பில் பெரிய அளவில் அவரால் வளர முடியவில்லை. அதனால் சென்னை 28 என்ற படத்தின் மூலம் டைரக்டராக மாறினார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அடுத்ததாக சரோஜா, கோவா, மங்காத்தா, மாநாடு, விஜய் நடிப்பில் வெளிவந்த தி கோட் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார். விரைவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தையும் வெங்கட்பிரபு இயக்க உள்ளார்.

- Advertisement -

கங்கை அமரன் போல் இளையராஜா சினிமா டைரக்டர் ஆகவில்லை என்றாலும் பாவலர் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் பல படங்களை தயாரித்திருக்கிறார், வெளியீடும் செய்திருக்கிறார். இப்போது அவரது இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவும், சித்தப்பா கங்கை அமரன் போல, அண்ணன் வெங்கட் பிரபு போல சினிமா டைரக்ட் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார். அதனால் மிக விரைவில் அவர் டைரக்டர் அவதாரம் எடுக்க இருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா ஏற்கனவே சில படங்களை தயாரித்திருக்கிறார் என்பது பலருக்கு தெரியாது. ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் என்ற படத்தையும், சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் ஆகிய படங்களை யுவன் சங்கர் ராஜா தான் தயாரித்துள்ளார். அடுத்ததாக இப்போது யுவன் சங்கர் ராஜா இயக்குனராகவும் மாற உள்ளார். இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய யுவன் சங்கர் ராஜா. நான் இயக்கப் போகும் படத்தில் கதாநாயகனாக சிம்புவை நடிக்க வைப்பேன் என்று கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்