- Advertisement -
Homeபொழுதுபோக்குழகரம் ஸ்டுடியோஸ் என 2வது தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நடிகர் சூர்யா - 2டி நிறுவனம்...

ழகரம் ஸ்டுடியோஸ் என 2வது தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நடிகர் சூர்யா – 2டி நிறுவனம் இழுத்து மூட என்ன காரணம்? – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ஏற்கனவே நடிகர் சூர்யா 2டி எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். இதில் நடிகர் சூர்யா மட்டுமின்றி அவரது தம்பி நடிகர் கார்த்தி நடித்த சில படங்களும் தயாரிக்கப்பட்டன.

அதே போல் நடிகை ஜோதிகா நடித்த சில படங்களையும் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்தான் தயாரித்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக 2டி தயாரிப்பு நிறுவனம் மூலம் எந்த படங்களையும் சூர்யா தயாரிப்பது இல்லை. ஒரு கட்டத்துக்கு பிறகு அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, அவர்களுக்கு 3 மாத சம்பளமும் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டன.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு துவக்க விழா நடந்தது. ஆவேசம் படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கும் இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். மேலும் பகத் பாசில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். சிங்கம் படத்துக்கு பின் சூர்யா இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.

நேற்று நடந்த சூர்யா 47 பட பூஜையின் போது ழகரம் ஸ்டுடியோஸ் என்ற பேனர் காணப்பட்டது. இதுதான் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த ழகரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் வேறு யாருமல்ல. நடிகர் சூர்யா தான். 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூடிய நிலையில் இந்த 2வது நிறுவனத்தை சூர்யா உருவாக்கி இருக்கிறார்.

- Advertisement -

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சின்ன பட்ஜெட் படங்களையும் நல்ல பீல்குட் படங்களையும் சூர்யா தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அகரம் பவுண்டேசன் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகியாக உள்ள ஜெயஸ்ரீ என்பவரும் சூர்யாவுடன் இந்த நிறுவனத்தின் இன்னொரு தயாரிப்பாளாளராக செயல்படுவதாக கூறப்படுகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படத்தை தயாரித்த வகையில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. அவருக்கு 2டி நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து லாபம் தருவதில் கடன்காரர்களால் சிக்கல் இருப்பதால் இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் சூர்யா துவங்கியிருப்பதாகவும் இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் கிடைக்கும் லாபத்தை அவருக்கு தர வாய்ப்புள்ளதாகம் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்