- Advertisement -
Homeபொழுதுபோக்குஆகஸ்ட் மாதத்தில் வரிசை கட்டி அடிக்க காத்திருக்கும் 15 படங்கள், சுதந்திர திருநாள் பண்டிகையை மாதம்...

ஆகஸ்ட் மாதத்தில் வரிசை கட்டி அடிக்க காத்திருக்கும் 15 படங்கள், சுதந்திர திருநாள் பண்டிகையை மாதம் முழுக்க கொண்டாடுங்கடே…

- Advertisement -

கடந்த ஜனவரி மாதம் துவங்கி, தமிழ் சினிமாவில் இதுவரை 150 படங்கள் வரை ரிலீஸ் செய்யப்பட்டு விட்டன. ஆனால் அதில் பெயர் சொல்லும்படியாக, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் என்றால், அந்த எண்ணிக்கை 10 கூட தாண்டாது என்பதுதான் கசப்பான விஷயம். ஏனெனில் எதிர்பார்த்த படங்கள் பலவும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தன.

சுந்தர் சி யின் அரண்மனை 4, துரை செந்தில்குமாரின் கருடன், நித்திலன் சுவாமிநாதனின் மகாராஜா மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி, ஸ்டார், லவ்வர் போன்ற சில படங்கள் மட்டுமே மாபெரும் வெற்றியும், ரசிகர்களின் கவனத்தையும் பெற்றன. இதில் அரண்மனை 4, மகாராஜா படங்கள் ரூ. 100 கோடி வசூலை தொட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 15 புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படுகின்றன. இதில் சில படங்கள் பல மாதங்களாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட எதிர்பார்ப்புக்குரிய படங்களாகவும் இருக்கின்றன. இயக்குனர்கள் பாலா, பா ரஞ்சித், மாரி செல்வராஜ், விஜய் மில்டன், அஜய் ஞானமுத்து, சிம்புதேவன் போன்றவர்களின் படங்களும் களத்தில் இருப்பதால், ஆகஸ்ட் மாதம் ரசிகர்களுக்கு செமையான விருந்து காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில், யோகிபாபு நடித்த போட், விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன், பரி இளவழகன் இயக்கத்தில் அம்மு அபிராமி நடித்த ஜமா, நடிகர் நகுல் நடித்த வாஸ்கோடகாமா ஆகிய 4 படங்களும் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகின்றன.

ஹலிதா ஷமீம் இயக்கிய மின்மினி படம், வேல ராமமூர்த்தியின் வீராயி மக்கள், பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான், தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த அந்தகன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரகுதாத்தா, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்த டிமாண்டி காலனி 2, ஆகிய 6 படங்களும் ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று வெளியாகின்றன.

தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கிய வாழை, சூரி நடித்த கொட்டுக்காளி, நானி நடித்த சூர்யாவின் சனிக்கிழமை ஆகிய 3 படங்களும் வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி ரிலீஸ் ஆகின்றன. இதுதவிர ஆர் கண்ணன் இயக்கத்தில் ஹன்சிகா மோத்வானி நடித்த காந்தாரி, டைரக்டர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் ஆகிய 2 படங்களும் ஆகஸ்ட் மாத ரிலீஸ் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வருகிற ஆகஸ்ட் மாதம் 15 படங்கள் ரிலீஸ் என்ற அறிவிப்பு, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சற்று முன்