- Advertisement -
Homeபொழுதுபோக்குகரூரில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு கூட்டம்… நெரிசலில் சிக்கி 36 பேர் பரிதாப பலி,...

கரூரில் நடந்த தவெக மக்கள் சந்திப்பு கூட்டம்… நெரிசலில் சிக்கி 36 பேர் பரிதாப பலி, வருத்தம் கூட தெரிவிக்காமல் சென்னைக்கு ‘பறந்த’ விஜய் – மீளா துயரில் கரூர் மக்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு இருந்து காரில் நாமக்கல் வந்த அவர் மதியம் 2 மணியளவில் நாமக்கல்லில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசினார். அதைத் தொடர்ந்து அவரது பிரசார வாகனத்தில் கரூர் புறப்பட்டு வந்தார்.

நாமக்கல்லில் இருந்து கரூருக்கு 34 கிலோ மீட்டர் தூரமே இருந்த நிலையில் இரவு 7 மணிக்கு பிறகுதான் கரூரில் கூட்டம் நடக்கும் பகுதிக்கு விஜயின் பிரசார வாகனம் வந்து சேர்ந்தது. வரும் வழியில் பல இடங்களில் மக்கள் கூட்டம் திரண்டு விஜய் வாகனத்தை முற்றுகையிட்டதால் நெரிசலில் அந்த வாகனம் கரூர் பகுதிக்கு வந்து சேர பல மணி நேரம் தாமதம் ஆனது.

- Advertisement -

மதியம் 3 மணியளவில் நாமக்கல்லில் இருந்து கிளம்பிய விஜய் கரூருக்கு இரவு 7 மணிக்கு பிறகுதான் வந்து சேர்ந்தார். ஆனால் காலை 9 மணி முதலே இந்த பகுதியில் மக்கள் கூட்டம் வந்து சேர துவங்கிவிட்டது. மதியம் மாலை என்று நேரம் அதிகரிக்க அதிகரிக்க பல மணி நேரம் குடிநீர் உணவு இன்றி மக்கள் வாடி வதங்கிய நிலையில் காத்திருந்தனர்.

ஒரு கட்டத்துக்கு பிறகு நெரிசல் அதிகரித்த போதும் பெருங்கூட்டத்தில் சிக்கிக்கொண்ட அவர்களால் வெளியேற முடியவில்லை. இந்நிலையில் விஜய் அங்கு வந்த போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் 16 பெண்கள் உ்டபட மொத்தம் 36 பேர் உயிரிழந்தனர். இன்னும் 50க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- Advertisement -

கரூர் கூட்டத்தை முடித்து விட்டு காரில் திருச்சி சென்ற நடிகர் விஜய் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு சென்று விட்டார். இதுவரை உயிரிழந்த மக்கள் குறித்து ஒரு வருத்தம் தெரிவித்து கூட அவர் அறிக்கை வெளியிடாதது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த செயல் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

தகவலறிந்த கரூர் எம்எல்ஏ செந்தில் பாலாஜி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கரூர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்தனர். தகவலறிந்த முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு விரைந்துள்ளார். மேலும் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணமும் நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு ரூ. 1லட்சம் தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் பாரத பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் ஆகியோர் இரங்கல் தெரிவித்த நிலையில், நடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்