- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படத்தை காப்பாற்றிய அந்த 4 பேர் யாருன்னு தெரியுமா - இல்லேன்னா மாப்ளே, இன்னொரு...

லியோ படத்தை காப்பாற்றிய அந்த 4 பேர் யாருன்னு தெரியுமா – இல்லேன்னா மாப்ளே, இன்னொரு பீஸ்ட் கதை மாதிரி ஆயிருக்குமேப்பா

- Advertisement -

லியோ படத்தை விஜய் ரசிகர்கள், உலகிலேயே வெளிவந்த படங்களில் இதுதான் மிகச்சிறந்த படம் என்பது போல் பாராட்டிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், பொதுவான சினிமா ரசிகர்கள் பார்க்கும்போது படத்தில் உள்ள பிளஸ்களை விட, நிறைய மைனஸ்களும் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதற்கு, ரசிகர்களின் மீது திணிக்கப்பட்ட அதீத எதிர்பார்ப்பும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

நடிகர் விஜயை பொருத்த வரை, ஒரு படத்தின் கதாநாயகன் என்ற முறையில், உயிரை கொடுத்து இந்த படத்துக்காக உழைத்திருக்கிறார் என்பதை ஒத்துக்கொள்ளவே வேண்டும். ஏனெனில், திரையில் அவரது உழைப்பும், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட சிரத்தையும் கண்டிப்பாக கண்களுக்குத் தெரிகிறது. நடுத்தர வயது குடும்பஸ்தனாக, நல்ல நடிப்பை தந்திருக்கிறார் விஜய்.

- Advertisement -

திரைக்கதையில் இடைவேளைக்கு பிறகு பெரிய புத்திசாலித்தனமோ, சுவாரசியமோ இல்லை என்பது, படம் பார்க்கும்போதே ரசிகர்களுக்கு அலுப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் துவக்கத்தில் கழுதைப்புலியை விஜய் அடக்குவதெல்லாம், விஜய் ரசிகர்களுக்காக வழக்கமான சினிமாத்தனம் நிறைந்த ஒரு ஹீரோயிசம்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த படத்தில் சில முக்கிய நடிகர்கள் இருப்பதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. குறிப்பாக சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யப் போன்ற நல்ல நடிகர்கள் ஓரிரு காட்சிகளில் காணாமல் போய்விடுவது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தருகிறது என்பதும் உண்மைதான்.

- Advertisement -

படத்தின் ஹீரோ விஜய், டைரக்டர் லோகேஷ் கனகராஜ் கடந்து, லியோ படத்தை காப்பாற்றியவர்கள் நான்கு பேர் மட்டுமே. அவர்கள் மிஷ்கின், சாண்டி மாஸ்டர், ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு, படத்தின் இசையமைப்பாளர் அனிரூத் ஆகிய 4 பேர் மட்டும் இல்லை என்றால், இந்த படம் அடுத்தடுத்த நிலைகளில் ரசிக்க ரசிகர்களுக்கு வாய்ப்பே இருந்திருக்காது என்பது தெள்ளத் தெளிவாகிறது.

கொடூர பார்வையில், நடிப்பில் மிரட்டிய சாண்டி மாஸ்டர், உடல் மொழியில் அபரிமிதமான நடிப்பை வெளிப்படுத்திய மிஷ்கின், சண்டை காட்சிகளை வேற லெவலில் அமைத்து ரசிகர்களை திகைப்படையச் செய்த அன்பறிவு மற்றும் படத்துக்கு பின்னணி இசை மூலம் உயிர் கொடுத்து எழுப்பிய அனிரூத் ஆகியோர், 4 புறமும் 4 தூண்களாக நின்று லியோவை தாங்கி பிடித்திருக்கின்றனர் என்பது, பொதுவான சினிமா ரசிகர்களின் பார்வையாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்