- Advertisement -
Homeபொழுதுபோக்குபாதியில் நிறுத்தப்பட்ட 7ஜி ரெயின்போ காலனி 2 ஷூட்டிங், டைரக்டர் - ஹீரோ ஈகோதான் காரணமா…...

பாதியில் நிறுத்தப்பட்ட 7ஜி ரெயின்போ காலனி 2 ஷூட்டிங், டைரக்டர் – ஹீரோ ஈகோதான் காரணமா… பழசை எல்லாம் மறந்துட்டாரா ரவிகிருஷ்ணா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். வித்தியாசமான கதைக்களத்தில், விசித்திரமான கேரக்டர்களில் கதை மாந்தர்களை உருவாக்கி ஒரு படத்தை, ஒரு வாழ்க்கையாக திரையில் கொண்டு வரும் வித்தை கற்றவர்தான் இயக்குனர் செல்வராகவன்.

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன், நடிகர் தனுஷின் சகோதரர், நடிகை சோனியா அகர்வாலின் முன்னாள் கணவர் என்ற அடையாளங்களை கொண்டவர் செல்வராகவன். சமீபமாக இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பீஸ்ட் ராயன் பகாசுரன் மார்க் ஆண்டனி சொர்க்கவாசல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

செல்வராகவன் இப்போது நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் மெண்டல் மனதில் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தை தயாரித்து இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வந்தார். இந்த படத்தில் ஹீரோவாக முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த ரவி கிருஷ்ணாவே நடிக்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த 7 ஜி ரெயின்போ காலனி தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத மிக முக்கியமான ஒரு வெற்றி படமாக இருந்தது. இந்த படம்தான் நடிகர் ரவி கிருஷ்ணாவின் அடையாளமாக இப்போது வரை இருந்து வருகிறது. ஆனால் இந்த படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு பாதியில் அந்தரத்தில் தொங்குகிறது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை.

- Advertisement -

இயக்குனர் செல்வராகவனுக்கும் ஹீரோ ரவி கிருஷ்ணாவுக்கும் ஏற்பட்ட ஈகோ தான் இந்த படம் பாதியில் நிற்க காரணம் என்று தெரியவந்துள்ளது. படத்தின் நாயகன் ரவி கிருஷ்ணாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனால் அவர் படப்பிடிப்புக்கு வராமல் சில மாதங்கள் படப்பிடிப்பு தடைப்பட்டது. அதன் பிறகு இயக்குனர் செல்வராகவனுக்கும் உடல் நலம் சரியில்லாமல் போய் சில மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை.

ஆனால் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று படப்பிடிப்புக்கு வராத காரணத்தால்தான், இயக்குனரும் அதேபோல் உடல் நலம் சரியில்லை என்று வேண்டுமென்றே இப்படி படப்பிடிப்பை நிறுத்திவிட்டார் என்று ரவி கிருஷ்ணா தவறாக கருதியுள்ளார். அதன் காரணமாக இருவருக்கும் ஈகோ ஏற்பட்டு இப்போது படப்பிடிப்பு தடைபட்டு அப்படியே நிற்கிறது. ஆனால் ரவிகிருஷ்ணா என்ற நடிகரை அடையாளப்படுத்தியதே செல்வராகவன்தான் என்ற பழசை அவர் மறந்துவிடக் கூடாது என்கின்றனர் ரசிகர்கள்.

- Advertisement -

சற்று முன்