தமிழ் சினிமாவில் பருத்திவீரன் போன்ற முதல் படத்திலேயே உச்சம் தொடும் கார்த்தி போன்ற வாய்ப்பு ஒரு சிலருக்கு தான் கிடைக்கும். அதற்கு காரணம் இயக்குநர் அமீர். புதியபாதை, நடிகர் பார்த்திபனுக்கு அப்படிப்பட்ட ஒரு படமாக அமைந்தது. பராசக்தி, சிவாஜி கணேசனுக்கு அப்படிப்பட்ட படமாக நிலைத்தது.
அதுபோல் சில இயக்குநர்களுக்கும் அந்த முதல்பட வெற்றி பெரிய அளவில் திரும்பி பார்க்க வைக்கும். அதில் பாரதிராஜா, பாக்யராஜ், பாலுமகேந்திரா, மகேந்திரன், ஷங்கர் போன்றவர்களின் வரிசையில் வந்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படம், பெரிய அலைவீச்சை, எதிர்பார்ப்பை அவர் மீது ஏற்படுத்தியது. கைதி, விக்ரம் படங்கள், அவரை பிரமிப்பாக பார்க்க வைத்தது.
ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய் நடித்த லியோ படம் சொதப்பியது. இது லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம்தானா, என பலரும் ஆச்சரியமாக கேட்கும் அளவுக்கு, இடைவேளைக்கு பிறகு ஏதோ தெலுங்கு டப்பிங் படம் பார்ப்பது போன்ற உணர்வைதான் ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது. அதிலும் நரபலி போன்ற அபத்தமான விஷயங்களை பார்த்து, ரசிகர்கள் அப்படியே தலை சுத்திப் போய்விட்டனர்.
அதிலும் குறிப்பாக எல்சியு என்ற விஷயத்தை சொல்லி, சொல்லி லியோ படத்தில் கமல் வருகிறார், கார்த்தி வருகிறார், தனுஷ் வருகிறார், சிம்பு வருகிறார், ராம்சரண் வருகிறார் என ஆளாளுக்கு ஏற்றிவிட்டு, படத்துக்கு அதுவே பெரிய மைனஸ் பாயிண்டாக மாறிவிட்டது. பலமுறை அவர்கள் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று லோகேஷ் கனகராஜ் சொல்லியும் யாரும் நம்பவே இல்லை. இது படத்தின் வெற்றிக்கு, எதிர்பார்ப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறியது.
இப்போது ரஜினி 171 படத்தில், இந்த மாதிரியான குளறுபடிகள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் லோகேஷ் கனகராஜ் மிகவும் கவனமாக இருக்கிறார். இதில் லோகேஷ் கனகராஜ் முன்பு இயக்கிய படங்களில் நடித்த யாரேனும் நடிகர், நடிகையர் ரஜினி 171 படத்தில் நடித்தால் அதையும் எல்சியு என கிளப்பி விட்டால் அது படத்துக்கு எதிரான விஷயமாக மாறிவிடும்.
அதனால் லியோ படத்தின் குளறுபடி ரஜினி 171 படத்தில் வந்துவிடக் கூடாது என்பதால், தனது இயக்கத்தில் முந்தைய படங்களில் நடித்த ஒரு நடிகர், நடிகையர் கூட இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதில்லை என்ற அதிரடி முடிவெடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதனால் யாருக்கும் அந்த வாய்ப்பை தருவதில்லை என்று திட்டமிட்டுள்ளார். இதில் எந்த காம்ப்ரமைஸ்க்கும் இடமில்லை என்றும் கூறியிருக்கிறார்.





