- Advertisement -
Homeபொழுதுபோக்குஇமான் ஏற்படுத்திய சலசலப்பால் மறந்து போன அந்த விஷயம், இதுவரைக்கும் ஒரு அப்டேட் கூட...

இமான் ஏற்படுத்திய சலசலப்பால் மறந்து போன அந்த விஷயம், இதுவரைக்கும் ஒரு அப்டேட் கூட இல்லையே – சிவகார்த்திகேயனும் கப்சிப்ன்னு இருந்துட்டாரே

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னுக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை துவக்கிய அவர், பாண்டிராஜ் இயக்கிய மெரினா படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதில் ஓவியாதான் அவருக்கு ஜோடியாக நடித்தார். வெகு விரைவில் சினிமாவில் முன்னணி நடிகரானார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் தந்த வெற்றியால் அடுத்தடுத்து முன்னேறிய சிவகார்த்திகேயன், அயலான் படத்தின் ரிலீஸ்க்காக காத்திருக்கிறார். இந்த சூழலில், சிவகார்த்திகேயன் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்று சொன்ன அந்த வார்த்தைகளால், சிவகார்த்திகேயன் கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார்.

- Advertisement -

அயலான் படமும், ஏகப்பட்ட பிரச்னைகளில் சிக்கியுள்ளது. படத்தை வெளியிடுவதில் பொருளாதார சிக்கல்கள் நீடிப்பதால், கடந்த தீபாவளிக்கு எதிர்பார்க்கப்பட்ட படம், பொங்கலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அதுவும் உறுதி செய்யப்படாத தகவலாக இருக்கிறது. படம் வெளிவந்தால் மட்டுமே, சிவகார்த்திகேயனால் அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்ல முடியும்.

அயலான் படத்தை பொருத்த வரை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கிய படம் என்பதால், நிச்சயம் படம் தோல்வியடைய வாய்ப்பில்லை. ஆனால் படம் வெளியானால் தான் சிவகார்த்திகேயனுக்கு பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தையும் ரசிகர்கள் மறக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் காலம் எல்லாத்தையும் மறக்கடிக்கும் என்பதுதான்.

- Advertisement -

இந்நிலையில், அயலான் படத்துக்கு பிறகு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்தியேகன் நடிப்பதாக இருந்தது. இருவரும் நேரில் சந்தித்து பேசிய நிலையில், படத்தின் கதை குறித்தும் இருவரும் விவாதித்து உள்ளனர். அயலான் படத்தை அடுத்து, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனும் உறுதிப்படுத்தி இருந்தார்.

ஆனால், கடந்த இரு மாதங்களுக்கு மேலாக அதுபற்றிய எந்தவிதமான அப்டேட்டும் இல்லை. சிவகார்த்திகேயன், ஏஆர் முருகதாஸ் இணைந்து நடிப்பது பற்றிய எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து ஏஆர் முருகதாஸிடம் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் என்று பதில் அளித்திருக்கிறார் ஏஆர் முருகதாஸ். வரும் 2024, ஜனவரியில் படப்பிடிப்பு துவங்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

சற்று முன்