நடிகர் ஜெய், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். பகவதி படத்தில், நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். தொடர்ந்து சென்னை 28 அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
தொடர்ந்து எங்கேயும் எப்போதும், கலகலப்பு 2, ராஜா ராணி, தீரா காதல், சுப்ரமணியபுரம், காபி வித் காதல், வாமணன், எண்ணித்துணிக, கோவா, குற்றம் குற்றமே, கனிமொழி, சரோஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்ற ஹிட் படங்களாக இருந்தன.
சின்னத்திரை நாயகி வாணி போஜனுடன் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்த ஜெய், காதல் வயப்பட்ட நிலையில் அவருடன் லிவிங் டு ரிலேசன்ஷிப்பில் இருந்தததால், இருவருமே தங்களுக்கான சினிமா வாய்ப்புகளை தவறவிட்டனர். பின்னர் ஒருகட்டத்தில் சுதாரித்துக்கொண்ட அவர்கள் தங்களது உறவை பிரேக் அப் செய்துவிட்டனர். மீண்டும் இப்போது ஜெய், நடிப்பில் மிக கவனம் செலுத்தி வரும் நிலையில், லேபிள் வெப் சீரிஸ்சில் அவர் ஏற்று நடித்த வக்கீல் கேரக்டரும் பேசப்படுகிறது.
ஜெய் நடித்த படங்களில் குறிப்பாக எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, சுப்ரமணியபுரம் போன்ற படங்கள் ஜெய்க்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன. அட்லி இயக்கத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக, ராஜா ராணி படத்தில் நடித்த ஜெய், மீண்டும் அன்னபூரணி படம் மூலம் நயன்தாராவுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
கடந்த 1ம் தேதி வெளியான இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் இஸ்லாமிய இளைஞராக ஜெய் நடித்திருக்கிறார். அன்னபூரணி படத்தின் பிரமோவுக்காக நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஜெய், அன்னபூரணி படத்தில் நடித்த அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
அந்த நேர்காணலில் ஜெய் கூறுகையில், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது நயன்தாரா உப்புமா கொண்டு வருவார். அந்த உப்புமாவுக்கு நான் அடிமைங்க. அப்படி ஒரு டேஸ்ட்டாக உப்புமா இருக்கும். பிரியாணி சமைத்தும் பரிமாறியுள்ளார். நான் உடல் எடை அதிகாிக்காமல் இருக்க முக்கிய காரணம் நான் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுவேன். காலையில் ஜூஸ், மதியம் சூப் மட்டுமே குடிப்பேன். இரவில் மட்டுமே சாப்பிடுவேன் என்றும் கூறியிருக்கிறார் நடிகர் ஜெய்.





