- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படத்தில் திடீரென செய்யப்பட்ட மாற்றம், அஜீத் ரசிகர்களுக்கு வந்த குழப்பம் - இதனால் படத்துக்கு...

விடாமுயற்சி படத்தில் திடீரென செய்யப்பட்ட மாற்றம், அஜீத் ரசிகர்களுக்கு வந்த குழப்பம் – இதனால் படத்துக்கு ஒண்ணும் பிரச்னை இல்லையே

- Advertisement -

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் அவரது 62வது படமான விடாமுயற்சி படப்பிடிப்பு, கடந்த அக்டோபர் 4ம் தேதி முதல் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு 45 தினங்கள் நடந்து முடிந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன் படக்குழு சென்னை திரும்பியது.

அடுத்தகட்டமாக துபாயில் படப்பிடிப்பு துவங்க உள்ளதால், அஜர்பைஜானில் இருந்து படக்குழு திரும்பியதாக கூறப்பட்ட நிலையில், மணல் புயல் காரணமாக அஜர்பைஜானில் படப்பிடிப்பை தொடர முடியவில்லை என்ற உண்மையான காரணம் தெரிய வந்தது. இப்போது மீண்டும் அஜர்பைஜான் சென்ற படக்குழுவினர், படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்த படத்தின் கதை ஒரு ஹாலிவுட் படத்தின் தழுவல் கதை என்றும் காணாமல் போன காதலியை, வில்லனிடம் இருந்து காதலன் மீட்பதுதான் ஆங்கில படத்தின் கதை. அதையே உல்டாவாக்கி, காணாமல் போன மனைவியை ( திரிஷா) வில்லனிடம் இருந்து காதலன் ( அஜீத்குமார்) மீட்பதுதான் விடாமுயற்சி படத்தின் கதை என்றும் சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இந்த படம் ஓராண்டுக்கு பிறகுதான் படப்பிடிப்பே துவங்கியது. படப்பிடிப்பு துவங்கிய சில வாரங்களில் படத்தில் பணிபுரிந்த கலை இயக்குநர் மிலன் மறைவு, அஜீத்குமார் உள்ளிட்ட படக்குழுவினரை நிலைகுலையச் செய்தது. எனினும் அவரது மனைவி மரியாவை கலை இயக்குநராக தொடரச் செய்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இந்த படத்தில் அஜீத்குமார், திரிஷா ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரங்களில் அர்ஜூன், ரெஜினா, பிரியா பவானி சங்கர், சஞ்சய் தத், ஆரவ் உள்ளிட்டோரும் நடிப்பது, படம் தரமான சம்பவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. கதை பழையதாக இருந்தாலும், திரைக்கதை விஷயத்தில் மகிழ்திருமேனி படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்வார் என்று ர்சிகர்கள் பேசி வருகின்றனர்.

இதற்கிடையே விடாமுயற்சி படத்தில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது, பலருக்கும் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விடாமுயற்சி படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா திடீரென மாற்றப்பட்டு, ஒளிப்பதிவாளராக ஓம்பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்கட்ட படப்பிடிப்பு முழுக்க நீரவ் ஷா இருந்த நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக மாற்றப்பட்டுள்ளார். இது ஏன் என்பதற்கான காரணம் தெரியாத நிலையில் படக்குழுவினரும், ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

சற்று முன்