- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி படப்பிடிப்பில் புது அவதாரம் எடுத்த அஜீத்குமார், ஷூட்டிங் இல்லாத நேரத்தில் அவரது செயலால் கலங்கிப்...

விடாமுயற்சி படப்பிடிப்பில் புது அவதாரம் எடுத்த அஜீத்குமார், ஷூட்டிங் இல்லாத நேரத்தில் அவரது செயலால் கலங்கிப் போன படக்குழுவினர்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிக்கும் 62வது படம் விடாமுயற்சி. மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா புரெடக்சன் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு, 3 மாதங்களாக அஜர்பைஜானில் நடந்து வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து, தற்போது 2ம் கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. ஜனவரி இறுதி வரை இது நீடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அஜீத்குமார் கார், பைக் ரேஸ் பிரியர். ஒரு படத்துக்கும், அடுத்த படத்துக்கும் சில மாதங்கள் இடைவெளி விடும் அஜீத்குமார் நீண்ட தூரம் பைக்கில் பயணிப்பார். துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவார். ஏர்கிராப்ட்டில் விமானம் ஓட்ட பயிற்சி எடுப்பார். இப்படி சினிமா தவிர மற்ற சில விஷயங்களிலும் அவருக்கு அதீத ஆர்வம் கொண்டவர். அதுபோல் புகைப்படம் எடுப்பதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்.

- Advertisement -

சமீபத்தில் அவருடன் விடாமுயற்சி படக்குழுவைச் சேர்ந்த ஒரு டெக்னீசியன் புகைப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டார். வாட்சப் டிபியில் அந்த படத்தை வைக்க அது வைரலாகி விட்டது. விடாமுயற்சி படத்தின் கெட்டப்பில் இருந்த அஜீத் புகைப்படம் வெளியானதால் டென்சன் ஆன பட இயக்குநர் மகிழ் திருமேனி, அந்த டெக்னிசியனை பணியில் இருந்தே நீக்கி வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

அஜர்பைஜானில் கடந்த 3 மாதங்களாக விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படக்குழுவினர் தங்கியுள்ள ஓட்டலுக்கும், படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கும் 40 கிலோ மீட்டர் தூரம் இருக்கிற நிலையில், படப்பிடிப்புக்கு கிளம்பும்போதே செல்போன்களை ஓட்டலில் வைத்து விட்டு வருவது முக்கிய விதிமுறையாக உள்ளது. பின்னர், இரவு ஓட்டலுக்கு திரும்பிய பின்பு தான் அவர்கள் தங்களது செல்போன்களை பயன்படுத்த முடியும்.

- Advertisement -

அதாவது படப்பிடிப்பு தளத்தில் செல்போன் இருந்தால் அங்கு நடக்கும் விஷயங்களை வீடியோவாக, புகைப்படங்களாக எடுத்து சிலர் பரவ விட்டு அது வைரலாகி விடும். படத்துக்கு தேவையற்ற சிக்கல்களை அது ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கை துவக்கத்தில் இருந்தே ஸ்ட்ரிக்ட் ஆக பின்பற்றப்படுகிறது.

ஆனால், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு காட்சிகள் இல்லாத நேரத்தில் ஓய்வாக இருக்கும் அஜீத்குமார், அங்கிருப்பவர்களை அவர்களுக்கே தெரியாமல் புகைப்படம் எடுத்து, அதை பிரிண்ட் போட்டு பிரேம் செய்து அன்று மாலையே அவர்களின் கைகளில் அன்பு பரிசாக தருகிறாராம். இவர் இப்படி எப்போது புகைப்படம் எடுத்தார் என தெரியாமல் கலங்கிப் போய்விடுகின்றனர். ஆனால் அவர் எடுத்த புகைப்படங்களை தந்து, அவர்களை அசத்தி கொண்டு இருக்கிறார் அஜீத்குமார். சமீபத்தில் அப்படி அவர் எடுத்த தனது புகைப்படத்தை ஆக்சன் கிங் அர்ஜூன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, லைக்ஸ் அள்ளியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்