நடிகர் சிவக்குமார், தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர்களில் மிக முக்கியமானவர். எம்ஜிஆர் சிவாஜி என்ற இரண்டு பெரிய சிகரங்களுடன் நடித்தவர். நடிக்க வந்த அந்த காலகட்டத்தில் முருகப் பெருமான் வேடம் என்றால் அது சிவக்குமார்தான். அந்த தெய்வீக தோற்றத்தில் அவரது முகம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.
புலிக்கு பிறந்து பூனையாகாது என்ற பழமொழியை நிரூபிக்கும் வகையில் அவரது மகன்கள் சூர்யா, கார்த்தி என இருவருமே இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். துவக்கத்தில் பள்ளி மாணவன் போல இருந்த சூர்யாவை, மௌனம் பேசியதே படம் வாயிலாக ஹீரோ ஆக்கியவர் அமீர். அதே போல் பருத்திவீரனில் சண்டியராக கார்த்தியை மாஸ் ஆக காட்டியவர் அமீர்.எனவே, குரு ஸ்தானத்தில் இவர்களுக்கு டைரக்டர் அமீர் இருக்கிறார்.
சென்னை, தியாகராய நகரில் சிவக்குமார் தனது மகன்களுடன் ஒரே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென சூர்யா, மும்பையில் சொந்தமாக பிளாட் வாங்கி ஜோதிகா மற்றும் தனது பிள்ளைகளுடன் அங்கு குடியேறி விட்டார். கார்த்தி மட்டுமே இப்போது சிவக்குமாருடன் இருந்து வருகிறார்.
இதற்கு துவக்கத்தில் சொல்லப்பட்ட காரணம், ஜோதிகாவின் வயதான பெற்றோரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சூர்யா இதற்கு சம்மதித்தார் என்றும், மும்பையில் கல்வியின் தரம் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதற்காகவும் இந்த முடிவு என்று சொல்லப்பட்டது.
ஆனால் உண்மையில் மனைவி சொல்லே மந்திரம் என்ற அடிப்படையில் சூர்யா இருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. சூர்யாவின் தந்தை சிவக்குமார், அவரது அம்மாவும் வயதானவர்கள். கார்த்தியும் வெளியூர் படப்பிடிப்புகளுக்கு போய் விட்டால் அவர்கள் தனிமையில்தான் இருக்கின்றனர்.
தவிர மும்பை சினிமாவில் தனக்கு இருக்கும் தொடர்புகளால் இந்தி பட வாய்ப்புகளை பயன்படுத்தி, மும்பையில் பாலிவுட் ஸ்டார் ஆக்கி காட்டுகிறேன் எனவும் ஜோதிகா சொன்னதை நம்பி சூர்யா இதற்கு சம்மதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே போல் இப்போது சூர்யா, ஜோதிகா முயற்சியால் இந்தி படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படி தனது பெற்றோர் வயது கருதாமல், தனது எதிர்காலம் கருதி இந்த முடிவை ஜோதிகா ஆலோசனைப்படி எடுத்திருப்பது சூர்யா ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.





