- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரைப்பட கல்லூரி மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றிய கேப்டன் - சென்னை திரைப்பட கல்லூரிக்கு விஜயகாந்த் பெயர்...

திரைப்பட கல்லூரி மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றிய கேப்டன் – சென்னை திரைப்பட கல்லூரிக்கு விஜயகாந்த் பெயர் வைக்க கோரிக்கை

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் மதுரையில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர். அரிசி ஆலைகள், தோட்டங்கள் என வசதியான வாழ்க்கையை வாழ்ந்தவர். ஆனால் அம்மா இறந்துவிட்டதால் ஒரு கட்டத்தில் படிப்பை தவிர்த்துவிட்டு, அரிசி ஆலையை கவனித்துக்கொண்டவர். அப்போது ரைஸ் மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வறுமை நிலையை பார்த்து வேதனைபட்டவர்.

ஒரு கட்டத்தில் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த விஜயகாந்த், சினிமா வாய்ப்புகளுக்காக அலைந்து திரிந்தவர். சரியாக சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்டவர். பின்னர், இனிக்கும் இளமை என்ற படம் மூலம் சினிமாவுக்குள் வந்தவர். அடுத்து, சிவப்பு மல்லி படம் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராகி ஒரு கட்டத்தில் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே என பெரிய நடிகராகி முன்னணி நடிகராக உயர்ந்தவர்.

- Advertisement -

இப்படி கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறியவர் என்பதால், தன்னை போல் யார் துன்பப்பட்டாலும், அவர்களுக்கு உதவி தேவைப்பட்டாலும் தானாக முன்வந்து உதவி செய்யும் குணம் கொண்டவர் விஜயகாந்த். அப்படித்தான், டிஎப்டி படித்து வந்த திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு தனது படங்களை இயக்க வாய்ப்பு கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் விஜயகாந்த்.

ஊமைவிழிகள் படம் வெளியாகும் வரை திரைப்பட கல்லூரி மாணவர்கள் என்றாலே தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்போ, மரியாதையோ இருக்காது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல, படம் எடுப்பதை புத்தகத்தில் படித்து விட்டு வந்த இவர்களுக்கு என்ன தெரியும் என்பதுதான் பலரது பார்வையாக இருந்தது.

- Advertisement -

ஆனால் திரைப்பட கல்லூரி மாணவர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஊமைவிழிகள் என்ற படத்தை இயக்க வாய்ப்பளித்தவர் விஜயகாந்த். அடுத்து புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன், செந்தூரப்பூவே, மாநகர காவல் என பல படங்கள், திரைப்பட கல்லூரி மாணவர்களான ஆர்கே செல்வமணி, ஆபாவாணன் போன்றவர்களை ஏணி ஏற்றியவரே கேப்டன்தான்.

அப்படி தனது சினிமா வாழ்க்கை பயணத்தில், திரைப்பட கல்லூரியில் படித்த 47 பேருக்கு வாய்ப்பளித்து அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றியவர் விஜயகாந்த். எனவே சென்னையில் உள்ள திரைப்பட கல்லூரிக்கு விஜயகாந்த் திரைப்பட கல்லூரி என பெயர் வைப்பது சிறப்பாக இருக்கும் என, கோலிவுட் வட்டாரத்தில் ஒரு கோரிக்கை எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்