நடிகர் விஜய் இப்போது உச்ச நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்ட சூப்பர் ஸ்டார் பட்டம் இனி விஜய்க்குதான் என்று சொல்லும் அளவுக்கு விஜய்தான், வசூலில் முதலிடத்தில் இருக்கிறார். இப்போது தமிழ் சினிமா நடிகர்களில் ரூ. 200 கோடி சம்பளம் வாங்குவது நடிகர் விஜய் மட்டும்தான்.
அதே போல் நடிகர் அஜீத்குமாரும் முன்னணி நடிகராக, விஜய்க்கு அடுத்தபடியாக இருக்கிறார். அதாவது இன்னும் விஜய் அளவுக்கு அவர் சம்பளம் வாங்கவில்லை. விடாமுயற்சியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க அவர் ரூ. 165 கோடி சம்பளம் வாங்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜீத்குமாரை பொருத்தவரை அவரது படங்களுக்கு இடையே நிறைய இடைவெளி விடுகிறார். அதாவது ஒரு படம் ரிலீஸானால் அவரது அடுத்த படம் வெளிவர ஓராண்டுக்கு மேல் தாமதமாகிறது. அல்லது இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு அவரே இடைவெளி விட்டு விடுகிறார். அடுத்தடுத்த படங்களில் நடிக்க போதிய ஆர்வம் அஜீத் காட்டுவதில்லை.
படம் கமிட் ஆக நாட்களில், மாதக்கணக்கில் பைக் ஓட்டச் சென்று விடுகிறார். பைக்கில் பல மாநிலங்களுக்கு டிரிப் செல்கிறார். வடமாநிலங்களில் அவர் மட்டுமே பைக்கில் சென்று பல இடங்களில், சாதாரண மக்களில் ஒருவராக இருந்து, அந்த தனிமனித சுதந்திரத்தை அனுபவிக்கும் காட்சிகள், சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகி, வைரலாவது தொடர்ந்து நடக்கிறது.
ஆனால் இப்போது அஜீத் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். விடாமுயற்சி படப்பிடிப்பில் இப்போது உள்ள அஜீத், இந்த படத்தை முடித்த பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் படத்தில் நடிக்க அவர் கமிட் ஆகியுள்ளார். அதற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த சூழலில் நடிகர் விஜய் வருகிற நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் போன்றவற்றில் அரசியல் களத்தில் இறங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சில ஆண்டுகள் அவர் நடிப்பை விட்டு விலகவும் முடிவு செய்துள்ளார். அதனால் இந்த இடைவெளியை நன்றாக பயன்படுத்திக்கொள்ளும் அஜீத், விஜயை போலவே சம்பளத்திலும் 200 கோடியை தொட்டுவிடுவார். அதிக படங்கள் மூலம் வசூலையும் எட்டி பிடித்து விடுவார். அதற்கு விஜய் சினிமாவை விட்டு விலகி நிற்கும் அந்த கால அவகாசமே, அஜீத்குமாருக்கு பெரிய வாய்ப்பாக அமைந்துவிடும் என்ற தகவல் இப்போது பரவி வருகிறது.





