நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன். தமிழில் ஏழாம் அறிவு படம் மூலம் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். இந்த படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. தொடர்ந்து பூஜை, புலி, வேதாளம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் தமிழ் சினிமாவில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதையடுத்து தெலுங்கு படவுலகில் ஸ்ருதிஹாசன் காலடி பதித்தார். அவரது உயரமான வாளிப்பான தோற்றமும், கவர்ச்சியும் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் அதிகரித்தது. இதையடுத்து தெலுங்கில் நிறைய படங்களில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.
ஸ்ருதிஹாசன் மும்பையில் தனியாக வசித்துவருகிறார். அவர் தனது பாய் பிரண்ட் ஒருவருடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்சிப் வாழ்ந்து வருவதாக அடிக்கடி வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். தன் மகள்களுக்கு திருமணம் குறித்து, கமல்ஹாசன் எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. அவரை போலவே அவரது மகள்களும் முரட்டு சிங்கிளாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் திரைக்கு நேற்று வந்த சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்துள்ளார். கேஜிஎப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் சலார். பிரபாஸ், பிருத்விராஜ் நடித்த இந்த படம் கலவையான விமர்சனங்களுக்கு இடையே திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இது நண்பர்களின் கதையாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிக்காக இயக்குநர் ராஜமவுலி, இயக்குநர் நீல் பிரசாந்த், நடிகர்கள் பிரபாஸ், பிருத்விராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அப்போது பேசிய ராஜமவுலி, ஸ்ருதிஹாசன் மிகச்சிறந்த டான்சர். அவரது நடன அசைவுகள் வித்யாசமாக இருக்கும். ரேஸ் குர்ரம், ஸ்ரீமந்துடு படங்களில் சிறந்த டான்சர் என ஸ்ருதி நிரூபித்திருந்தார்.
எனக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் டிவியிலோ, மொபைல் போனிலோ ஸ்ருதி டான்ஸ் வீடியோக்களை பார்ப்பேன். ஸ்ருதிக்கு இந்த படத்தில் ஐட்டம் சாங்க் டான்ஸ் வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அந்த நல்ல வாய்ப்பை ஏன் இயக்குநர் பிரசாந்த் நீல் தவறவிட்டார் எனத் தெரியவில்லை என்று இயக்குநர் ராஜமவுலி ஆதங்கமாக கூறியிருக்கிறார்.





