- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல காமெடி நடிகர் போண்டாமணி மரணம்... திரையுலகினர் அஞ்சலி...

பிரபல காமெடி நடிகர் போண்டாமணி மரணம்… திரையுலகினர் அஞ்சலி…

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் போண்டாமணி. இலங்கையைச் சேர்ந்த இவர் தமிழ்நாட்டிற்கு குடி பெயர்ந்து பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக திரைப்படங்களில் துணை கதாபாத்திர ரோலில் தலைக்காட்ட ஆரம்பித்த அவர், வடிவேலுவுடன் இணைந்து பல முக்கிய நகைச்சுவை காட்சிகளில் நடித்தார்.

நகைச்சுவை திரைப்படமான சுந்தரா டிராவல்ஸ் இல், ஒரு காட்சியில் மணமகன் கதாபாத்திரத்தில் வரும் போண்டாமணியை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அதில் முரளி மற்றும் வடிவேலு ஆகியோர் போண்டாமணிக்கு மணமகனாக அலங்கரிக்கும் அந்த காட்சி, திரையரங்குகளில் சிரிப்பு வெடியை வெடிக்கச் செய்தது. இது மட்டுமல்லாமல் பல்வேறு திரைப்படங்களில் வடிவேலுவுடன் இணைந்து அதகளப்படுத்தி இருக்கிறார் போண்டாமணி.

- Advertisement -

வின்னர் திரைப்படத்தில் முறுக்கு மீசையுடன் அவர் உறுமி பேசும் டயலாக்கை பலரும் ரசித்தனர். இங்கிலீஷ்காரன் திரைப்படத்திலும், மணமகன் சீப்பை ஒழித்து வைத்துவிட்டு இப்போது எப்படி கல்யாணம் நடக்கும் என்று கேள்வி கேட்டு நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருப்பார் போண்டாமணி. இது மட்டுமல்லாமல் மருதமலை திரைப்படத்தில் அவர் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் வரும் காட்சி, இன்றளவும் பார்த்தால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் போண்டாமணி நடித்துள்ளார். வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளில் பக்க பலமாக இருந்த போண்டாமணி, கடந்த சில மாதங்களாக சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். சிறுநீரக செயல்பாட்டை இழந்தததால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் உதவினர். நடிகர் விஜய் சேதுபதி போண்டாமணிக்கு பண உதவி அளித்தார்.

- Advertisement -

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போனதால், டயாலிசிஸ் சிகிச்சை முறையை அவர் மேற்கொண்டு வந்தார். இப்படி உடல்நிலை சரியில்லாமல் அவதிப்படும் அவருக்கு வடிவேலு எந்தவித உதவியும் செய்யவில்லை என பலர் குற்றம் சாட்டினர். இது குறித்த பேச்சும் கோலிவுட்டில் இருந்து சர்ச்சையை கிளப்பியது. ஆனால் வடிவேலு தரப்பிலிருந்து இதற்கு எந்த பதிலும் வரவில்லை என்றே கூறலாம்.

இது இப்படி இருக்க, தொடர்ந்து டயாலிசிஸ் செய்து வந்த அவர், பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் உள்ள தனது வாடகை வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக, உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போண்டா மணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். நகைச்சுவை நடிகரின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த திரையுலகினர், அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்