- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல கதாநாயகியுடன் இணையும் டிமான்ட்டி காலனி இயக்குனர்... நீண்ட நாட்களுக்குப் பின்பு களத்தில் இறங்கும் முக்கிய...

பிரபல கதாநாயகியுடன் இணையும் டிமான்ட்டி காலனி இயக்குனர்… நீண்ட நாட்களுக்குப் பின்பு களத்தில் இறங்கும் முக்கிய தயாரிப்பு நிறுவனம்…

- Advertisement -

இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் இளம் இயக்குனர்களில் பெரும்பாலானவர்களுக்கு நடைமேடையாய் அமைந்தது நாளைய இயக்குனர் நிகழ்ச்சி தான். கார்த்திக் சுப்புராஜ், சித்தா அருண்குமார் என ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியின் மூலம் வெளி உலகத்திற்கு தெரிய ஆரம்பிக்க அந்த வரிசையில் இடம் பெற்றவர் அஜய் ஞானமுத்து. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில், இறுதிச்சுற்று வரை வந்த இயக்குனர்களில் ஒருவராக அவர் இருந்தார்.

அங்கிருந்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் உதவியாளராக பணிபுரிந்தார் அஜய் ஞானமுத்து. ஏழாம் அறிவு மற்றும் துப்பாக்கி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் அஜய் ஞானமுத்து பணிபுரிந்தார். இதன்பிறகு அருள் நிதியை வைத்து டிமான்ட்டி காலனி என்னும் திரைப்படத்தை எடுத்ததன் மூலம் இயக்குனராக அவர் அவதாரம் எடுத்தார்.

- Advertisement -

அந்த சமயம் தமிழ் சினிமாவில் ஏராளமான பேய் திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், தனித்துவமாக ரசிகர்களை கவர்ந்தது டிமான்ட்டி காலனி. வழக்கம்போல ஒரு பேய் பங்களா, அதற்குள் செல்லும் இளைஞர்கள் என சாதாரண கதையை அஜய் ஞானமுத்து கையில் எடுத்தாலும், அதை சொல்லிய விதத்தில் அவர் சபாஷ் போட வைத்தார்.

குறிப்பாக இரண்டாம் பாதியில் ஒரு அறைக்குள்ளேயே நடப்பது போல் காட்சி எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒவ்வொரு காட்சியும் நம்மை இருக்கை நுணுக்கி அழைத்து வந்து, பரபரப்பை ஏற்படுத்தி இருப்பார் இயக்குனர். இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பால், அடுத்ததாக நயன்தாராவை வைத்து அவர் இமைக்கா நொடிகள் திரைப்படத்தை இயக்கினார்.

- Advertisement -

க்ரைம் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் மிரட்டலான நடிப்பால் புத்துயிர் பெற்றது. படத்தின் நீளம் ஒரு குறையாக இருக்க, விறுவிறுப்பான காட்சியின் மூலம் அதை நிவர்த்தி செய்திருந்தார் அஜய் ஞானமுத்து. இப்படி அடுத்தடுத்த இரண்டு ஹிட் திரைப்படங்களை கொடுத்த, மூன்றாவதாக விக்ரமுடன் இணைந்தார். கோப்ரா எனும் பெயரில் உருவான இந்த திரைப்படம், ஆச்சரியமான ட்விஸ்ட்டுகளை ஒழித்து வைத்திருந்தாலும், அதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் கொடுக்க தவறிவிட்டது.

இதனால் கோப்ரா திரைப்படம் படுதோல்வி அடைய, தற்போது டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் எடுத்துள்ளார். அருள்நிதி பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது அவர், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு ஒரு படத்தை இயக்க உள்ளாராம். இந்தப் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில், பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்