- Advertisement -
Homeபொழுதுபோக்குஅயலான் படம் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சனை...

அயலான் படம் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சனை சீண்டினாரா – அந்த விஷயத்தை பேசியது ஏன்?

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் ரவிக்குமார் இயக்கிய படம் அயலான். ஏலியன் பொம்மையை மையப்படுத்திய இந்த கதை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஏலியனுக்கு பின்னணி வாய்ஸ் கொடுத்திருப்பவர் நடிகர் சித்தார்த்.

இயக்குநர் ரவிக்குமார், நேற்று இன்று நாளை என்ற படத்தை எடுத்து வெற்றி பெற்றவர். டைம் டிராவல் கருவை மையப்படுத்திய இந்த கதையை மிக எளிமையாக, அதே வேளையில் மிகவும் ரசிக்கும்படியாக சொல்லி இருந்தார். இந்த படத்தை பார்த்து அசந்துபோன சிவகார்த்திகேயன் தானே விரும்பி அழைத்து கொடுத்த வாய்ப்புதான் அயலான்.

- Advertisement -

அயலான் படத்தை தொடர்ந்து ரவிக்குமார் அயலான் 2 படத்தை இயக்குவாரா அல்லது சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏனெனில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் சூர்யா, ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க விரும்பி ரூ. 50 லட்சம் அட்வான்ஸ்சும் கொடுத்திருக்கிறார். ஆனால் இன்னமும் ரவிக்குமாரை வெயிட்டிங் வைத்திருக்கிறார்.

அயலான் படம், கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என உறுதியாக தெரிகிறது. இந்த அயலான் படத்தின் ப்ரீ ரிலீஸ் குறித்த பிரமோ நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் நடந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்,

- Advertisement -

இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், எனக்கு சினிமாவில் அவரை முந்தணும், இவரை முந்தணும் என்ற போட்டியே கிடையாது. என்னால் முடிந்தவரை ரசிகர்களுக்கு நல்ல படங்களை தர ஆசைப்படுகிறேன். தெலுங்கில் ஒரு பாகுபலி, கன்னடத்தில் ஒரு கேஜிஎப், தமிழில் ஒரு அயலான் என தயாரிப்பாளர் குறிப்பிட்டார். படத்தின் இயக்குநர் மீதும், படத்தின் மீது கொண்ட அபார நம்பிக்கையால் அவர் அவ்வாறு தன்னம்பிக்கையாக பேசுகிறார்.

அதுமட்டுமின்றி நான் ரத்தம், துப்பாக்கி சத்தம் போன்றவற்றை விரும்பவில்லை. இந்த படத்தில் ரத்தம், துப்பாக்கியை நம்பாமல் ஏலியன் என்ற பொம்மையை நம்பி படம் எடுத்திருக்கிறோம். தமிழில் இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார். இது ரத்தம், துப்பாக்கி என லியோ, ஜெயிலர் போன்ற வன்முறை படங்களை எடுத்து வரும் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சனை குத்திக்காட்டுவது போல உள்ளதாக பலரும் விமர்சிக்க துவங்கி அது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்