தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கிய வெற்றிமாறன் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தார். உதயம் என்எச் 4 பொறியாளன் கொடி லென்ஸ் அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல படங்களை கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் சார்பில் இயக்குனர் வெற்றிமாறன் சொந்தமாக தயாரித்திருக்கிறார்.
கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான அனல் மேலே பனித்துளி என்ற படத்தை வெற்றிமாறன் தயாரித்திருந்தார். சமீபத்தில் அறம் பட இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் மனுஷி என்ற படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு தணிக்கை சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது. இந்த படத்தில் மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும் கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தணிக்கைச் சான்று மறுக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது சென்சார் போர்டு மனுஷி படத்தின் ஆட்சேபனையான காட்சிகளை நீக்கினால் தணிக்கை சான்றிதழ் வழங்க தயாராக உள்ளதாக கோர்ட்டில் பதில் அளித்தது. படத்தை மீண்டும் தணிக்கை செய்யக்கோரி வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணையில் சென்சார் போர்டு மனுஷி படத்தின் ஆட்சேபனையான காட்சிகளை நீக்கினால் தணிக்கை சான்றிதழ் வழங்க தயாராக உள்ளதாக கோர்ட்டில் பதில் அளித்தது.
கடந்த 29ம் தேதி விசாரணையில் மனுஷி படத்தில் சில காட்சிகளை நீக்கி 2 வாரத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்புமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவான படம் பேட் கேர்ள். இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்து இந்த படம் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. படத்தின் டீசரில் சிறுவர் சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள் அதிக அளவில் உள்ளதாகவும் இது பாலியல் குற்றம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறன் இனி தனது கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் படங்கள் தயாரிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார். சமீபத்தில் அவர் நிகழ்ச்சியில்இந்த தகவலை அவர் கூறினார். வெற்றிமாறன் கூறியதாவது, ஒரு இயக்குனராக படம் செய்வது எளிது. ஆனால் ஒரு தயாரிப்பாளராக இருப்பது மிகவும் கடினம். மனுஷி மற்றும் பேட் கேர்ள் படங்கள் தணிக்கை துறையில் பல சிக்கல்களை சந்தித்தன.
தயாரிப்பாளராக இருந்தபோது பல சவால்களை சந்தித்தேன். இனி எனது கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் கம்பெனி சார்பில் படம் தயாரிக்க மாட்டோம். அந்த நிறுவனத்தை மூடுகிறோம் என்று வெற்றிமாறன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ் சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூகப் பிரச்சினைகளை தைரியமாக பேசும் படங்களுக்கு தணிக்கை துறையில் ஏற்படும் தடைகள், கலைஞர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்துகின்றன என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.





