- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் கிளைமேக்ஸை நெருங்கும் நேரத்தில் விமர்சனத்தில் சிக்கிக்கொண்ட நடிகை விசித்ரா - அப்போ டைட்டில் வின்னர்...

பிக்பாஸ் கிளைமேக்ஸை நெருங்கும் நேரத்தில் விமர்சனத்தில் சிக்கிக்கொண்ட நடிகை விசித்ரா – அப்போ டைட்டில் வின்னர் விசித்ராவுக்கு கிடைக்காதா?

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்து, கிளைமேக்ஸை நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இன்னும் இரு வாரங்களில் பிக்பாஸ் டைட்டில் வின்னரை அறிவிக்க உள்ளனர். இதுவரை வந்த விமர்சனங்களின் அடிப்படையில் நடிகை விசித்ரா இந்தமுறை டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஏனெனில் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தபோதே டிகிரி பட்டத்தை காட்டி, 50 வயதிலும் படிக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினார். படிப்பின் முக்கியத்துவம் குறித்து, நிகழ்ச்சியில் ஒரு வாரம் முழுக்க டாபிக் ஓடி, அது மெயின் கண்டென்ட் ஆக இருந்தது. இதில் வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா அதிரடியாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

- Advertisement -

தொடர்ந்து விசித்ரா, எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ளாமல் பல விஷயங்களில் நாகரிகமாக, நாசூக்காக கலந்துக்கொண்டார். சர்ச்சையான விஷயங்களில் தெளிவான முடிவுகளை சொன்னார். ஒரு அனுபவமுள்ள பெண்மணியாக அவர் நடந்துக்கொண்டது பலருக்கும் பிடித்துப் போனது.

அத்துடன் அவரவர் வாழ்வில் நடந்த பூகம்ப விஷயங்களை சொன்ன போது, 22 ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் நடந்த ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்கில், ஹீரோ நடிகர், தன்னை ரூமுக்கு அழைத்து குறித்து சொன்னார். மேலும், ஸ்டண்ட் மாஸ்டர் கன்னத்தில் அறைந்தது குறித்தும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இதுபோன்ற சில விஷயங்களால் இந்தமுறை பிக்பாஸ் வின்னர் விசித்ரா என, பலரும் கூறிவருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் ஸிங்க்கில் பாத்திரங்களை கழுவியபடி சக போட்டியாளர் தினேஷை கண்டபடி திட்டுகிறார். குறிப்பாக அவரது மனைவி ரக்சிதா மகாலட்சுமிவை, தயவு செய்து திரும்ப வந்துடாதே என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சில மூஞ்சிகளை பார்த்தாலே வெறுப்பா இருக்கும். என்ன ட்ரை பண்ணினாலும் அந்த வெறுப்பு போகவே போகாது. இவங்க எல்லாம் இருந்து என்ன பிரயோசனம்? கூட இருக்கறவங்க எல்லாருக்கும் நியுசென்ஸ்தான். இந்த நியுசென்ஸ்கூட எப்படி குடித்தனம் பண்ணுவாங்க. விட்டுட்டு ஓட வேண்டியதுதான். மூனு மாசம் இவங்களோட குடித்தனம் பண்ண முடியலே. திரும்பி கிரும்பி வந்துடாதம்மா, தாயே, இவங்க கூட குடித்தனம் பண்றதுக்கு தனியா இருந்துடலாம் என, தனக்குத்தானே கேமரா முன் பேசியிருக்கிறார் விசித்ரா. இது தேவையில்லாத பேச்சு என, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்