நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 3 மாதங்களாக விஜய் 68 படம் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை, ஐதராபாத், துருக்கி என பல முக்கிய நகரங்களில் எடுக்கப்பட்ட இந்த படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் டீஏஜிங் செய்யப்பட்ட தோற்றத்தில் இப்போது விஜய் காணப்படுகிறார்.
அந்த கெட்டப்பில்தான் நேற்று முன்தினம் விஜய், தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு வந்து மறைந்த நடிகர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதே போல் இன்று, திருநெல்வேலியில் நடந்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார்.
லியோ படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் கடைசியில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட அந்த படம், வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக பலத்த ஏமாற்றத்தை அளித்தது. குறிப்பாக திரைக்கதை செம சொதப்பலாக இருந்து ரசிகர்களை ஏமாற்றியது. கடைசியில் அது ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் என்ற படத்தின் காப்பி என்பதும் தெரிய வந்தது.
அதே போல் இப்போது எடுக்கப்பட்டு வரும் விஜய் 68 படமும் ஈயடிச்சான் காப்பிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. லோக்கல் படங்களாக இல்லாமல் பாரின் படங்களாக அதாவது ஹாலிவுட் படங்களாக காப்பியடிப்பதுதான் அவர்களது ஸ்டைலாக இருக்கிறது.
இப்போது எடுக்கப்பட்டு வரும் விஜய் 68 படம், கடந்த 2019ம் ஆண்டில் வில்ஸ்மித் நடிப்பில் வெளிவந்த ஜெமினிமேன் என்ற படத்தின் இன்ஸ்பிரேசன்தான். சொந்த சரக்கு எதுவும் இல்லாமல், பாரின் சரக்கை எடுத்து அதில் கொஞ்சம் விஜய் ஸ்டைலை கலந்து, மசாலா எல்லாம் தடவி அடுத்து வசூலுக்கு தயாராகி வருகிறது வெங்கட்பிரபு குழு.
அதுமட்டுமின்றி படப்பிடிப்பு தளத்திலும் விஜயை வெறுப்பேற்றி வருகிறார் வெங்கட்பிரபு. படத்தின் வசனகர்த்தா எழுதிய நகைச்சுவை வசனங்களை அடிக்கடி மாற்றி எழுதி, வெங்கட்பிரபு விஜயை பயங்கரமாக கடுப்பேற்றி உள்ளார். இனிமேல், அடுத்த நாள் காட்சியை முதல்நாளே சொல்லிடுங்க. அப்போதுதான் நான் அதற்கேற்ப தயாராக வரமுடியும். இப்படி அடிக்கடி சீன்களை, டயலாக்குகளை என வெளிப்படையாக, கோபமாகவே சொல்லி இருக்கிறார்.





