- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் 68 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் - விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டில் அந்த மகிழ்ச்சி காத்திருக்கிறதா?...

விஜய் 68 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் – விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டில் அந்த மகிழ்ச்சி காத்திருக்கிறதா? – கேப்டன் மறைந்த இந்த நேரத்தில் விஜய் ஓகே சொல்வாரா…

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, அடுத்த படத்தில் நடிக்க கிளம்பி விட்டார் விஜய். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 என்ற இந்த படத்துக்காக விஜய் சம்பளம் ரூ. 200 கோடியாக உயர்த்தப்பட்டதும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் லியோ படத்தில் விஜய் பெற்ற சம்பளம் ரூ. 125 கோடி தான்.

வெங்கட்பிரபுவை பொருத்தவரை ஜாலியான பேர்வழி. தன் நண்பர்களுடன் உள்ளூரில் போடும் கொண்டாட்டத்தை தான், வெளியூரில், வெளிநாட்டில் ஷூட்டிங் என்ற பெயரில் ஜாலியாக கழிப்பார் என பலரும் கலாய்ப்பது உண்டு. ஏனெனில் அவரது படங்களும், படப்பிடிப்பும் ஜாலியாக தான் இருக்கும்.

- Advertisement -

ஆனால் விஜய் சற்று சீரியஸாக இருப்பவர். ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாக இருப்பார். கேமரா முன் வந்துவிட்டால் அவரது நடிப்பாற்றலும், வேகமும், நடனத்திறமையும் அப்படியோ மடை திறந்த வெள்ளமாக வெளிப்படும். இது சக நடிகர் நடிகைகளுக்கே ஆச்சரியப்படுத்தும். அதனால் விஜய் எப்போ்ப்பட்ட கதை என்றாலும், அவரால் மிக எளிதாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றுவிட முடியும்.

விஜய் 68 படத்தின் டைட்டில் பெயர் முதலில் பசில் என்றும் பாஸ் என்றும் பேசப்பட்டது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, படத்தின் பெயர் டை்டில் கண்டிப்பாக பாஸ் இல்லை என்று உறுதிப்படுத்தினார். அதையடுத்து படத்தின் பெயர் கோட் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதை யாரும் படக்குழு தயாரிப்பில் மறுக்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு கொண்டாட்ட பரிசாக, அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று மாலை விஜய் படத்தின் டைட்டில் வெளியீடு செய்யவும், நாளை புத்தாண்டு தினத்தன்று செகன்ட் லுக் போஸ்டர் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் கோட் என டைட்டில் ஏற்கனவே ரசிகர்களை சென்றடைந்தது விஜய்க்கு அதிருப்தியை தந்துள்ளது.

இரு தினங்களுக்கு முன்புதான் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார். இன்னும் அவரது மறைவு குறித்த வேதனை மக்கள் மனங்களில் இருந்து நீங்கவில்லை. அதனால் இன்று மாலை டைட்டில் வெளியீடு, நாளை பர்ஸ்ட் லுக் வெளியீடு விஷயங்களை பொங்கலுக்கு மாற்றி வைத்து விடலாம். இன்னும் 2 வாரங்கள் போகட்டும் என முடிவு செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அதுகுறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்