சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மகன்தான் நடிகர்கள் ஜீவா, ஜித்தன் ரமேஷ். ஆசை ஆசையாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜீவா. நல்ல கதைகளில், நல்ல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
பல படங்களில் காதல் நாயகனாகவும், பல படங்களில் ஆக்சன் ஹீரோவாகவும் ஜீவா அசத்தியிருக்கிறார். குறிப்பாக சிவா மனசுல சக்தி, நண்பன், ரௌத்திரம், கோ, வரலாறு முக்கியம், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் என பல படங்களில் நடித்தவர் ஜீவா.
திருநாள், கற்றது தமிழ், ஜிப்ஸி, கச்சேரி ஆரம்பம், ஈ, சிங்கம்புலி என சில படங்களில் வித்யாசமான கேரக்டர்களிலும் ஜீவா நடித்திருப்பார். ஜீவாவை பொருத்தவரை எந்த கேரக்டர் என்றாலும் அவரது நடிப்பில் தனித்துவம் இருக்கும். ஜகநாதனின் ஈ படத்தில் பேட்டை ரவுடியாக அவரது நடிப்பு பேசப்பட்டது.
நல்ல நடிகராக இருந்தும், ஜீவாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்கள், நல்ல கேரக்டர்கள் வாய்க்கவில்லை என்றே சொல்லாம். அவர் எதிர்பார்த்து நடித்த பல படங்கள், ரசிகர்களிடம் மிக மோசமான தோல்வியை தழுவியது. நன்றாக நடித்தும், கதை சரியில்லாததால் அவரால் தொடர்ந்து சினிமாவில் ஜெயிக்க முடியவில்லை.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் நல்ல கதைகள், நல்ல நடிகர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ், சியான் விக்ரம், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்கள் எல்லாம் கோடி கோடியாக சம்பளத்தை குவிக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர தயாராகி விட்டார் நடிகர் ஜீவா.
அதனால் சாமி, சிங்கம், காக்க காக்க போன்ற அதிரடி ஆக்சன் படங்களில் நடித்தால்தான் பழைய இடத்துக்கு வர முடியும். மற்ற நடிகர்களை போல, தனக்கும் முக்கியத்துவம் கிடைக்கும் என ஜீவா முடிவு செய்துவிட்டார். அதனால் அந்த ஜானர் படங்களில்தான் இனி நடிப்பது என, அதற்கான இயக்குநர்களை தேடி வருகிறார். ஜீவா சொல்லும் ஜானரில் கதையை கையில் வைத்துக்கொண்டு விஜய், அஜீத், சூர்யா கால்ஷீட் கிடைக்கவில்லை என புலம்பும் இயக்குநர்கள் ஜீவா வீட்டுக்கு லைன்ல வாங்க, உடனே ஓகே ஆயிடும்.





