நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில், ஒரு காலகட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ. 5 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை சம்பளம் வாங்கிய பிஸியான நடிகர். சந்திரமுகி படத்தில் நடிக்க ரஜினியிடம் பி. வாசு பேசிய போது, இந்த படத்தில் நடிக்க வடிவேலு கால்ஷீட் இருக்குமான்னு கேட்டுக்குங்க, என்று சூப்பர் ஸ்டாரே குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்.
அந்த அளவுக்கு வடிவேலு நடித்திருந்தாலே, அந்த படத்துக்கு தனி வரவேற்பு கிடைத்த காலகட்டம் அது. ரசிகர்கள் வடிவேலுவை அணுஅணுவாக ரசித்து கொண்டாடினர். அதனால்தான் இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது.
நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பது போல, வடிவேலுவுக்கு பெயரும் புகழும் அதிகமானதால் அவர் ஒரு கட்டத்தில் தன்னிலை மறந்து, தன்னை வளர்த்துவிட்ட கேப்டன் விஜயகாந்த், இயக்குநர் ஷங்கர் போன்றவர்களையே உதாசீனப்படுத்த ஆரம்பித்தார். தன்னுடன் நடித்த துணை நடிகர்களையும் பாடாய்படுத்தினார்.
அதனால்தான் சிங்கமுத்து, தம்பி ராமையா போன்றவர்கள் அவரை விட்டு விலகினர். அல்வா வாசு, போண்டாமணி போன்றவர்கள் வடிவேலுவுடன் இருந்தும் அவர்களை பெரிய அளவில் வளரவிடாமல் செய்தவர் வடிவேலு. உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு பணமின்றி தவித்த அவர்களுக்கு வடிவேலு எந்த ஒரு உதவியும் செய்யாமல் ஏமாற்றியவர் வடிவேலு என்றும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் காலமான விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் வடிவேலு வரவில்லை. ஒரு இரங்கல் அறிக்கை கூட அவர் வெளியிடவில்லை. இதையடுத்து தன் மீது தமிழ் சினிமா ரசிகர்களும், இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் கடும் கோபத்தில் இருப்பதால், இனி சென்னையை விட்டுச் சென்று தனது சொந்த ஊரான மதுரையிலேயே செட்டில் ஆக முடிவு செய்துவிட்டார் வடிவேலு.
இதற்காக மதுரையில் 20 ஆயிரம் சதுர அடியில், 20 அறைகள் கொண்ட பிரமாண்ட பங்களா ஒன்றை கட்டி வருகிறார் வடிவேலு. தற்போது உள்ள பழைய வீட்டில், கார் பார்க்கிங் வசதி இல்லாததால், அடிக்கடி அந்த ஏரியாவுக்ககுள் இவர் சென்றால் பிரச்னை வருகிறதாம். அதனால் இந்த புதிய வீட்டில் பார்க்கிங் வசதிக்காக நிறைய இடத்தை விட்டு கட்டி வருகிறார். இனி மகன், மகள், பேரப்பிள்ளைகள் என மதுரையிலேயே வடிவேல் செட்டிலாக உள்ளார் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.





