- Advertisement -
Homeபொழுதுபோக்குஎம்ஜிஆர் படத்துக்கு இசையமைத்த இளையராஜா, டிஎம்எஸ் பாடிய பாடலை ஏற்க மறுத்த எம்ஜிஆர் - கடைசியில்...

எம்ஜிஆர் படத்துக்கு இசையமைத்த இளையராஜா, டிஎம்எஸ் பாடிய பாடலை ஏற்க மறுத்த எம்ஜிஆர் – கடைசியில் முதல்வர் பேச்சை தட்ட முடியாமல் தடுமாறிய இசைஞானி!

- Advertisement -

அன்றைய முதல்வர் எம்ஜிஆர் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் கூறியதாவது, எம்ஜிஆர் அப்போது தமிழகத்தின் முதல்வராக இருந்தார். கவிஞர் வாலியிடம் உன்னை விட மாட்டேன் என்ற ஒரு புதிய படத்தில் எம்ஜிஆர் நடிக்க இருப்பதாகவும் அதற்கு கதை வசனம் எழுதுமாறும் வாலியிடம் கூறியிருந்தார்.

அந்த படத்துக்கு இசையமைக்க இசைஞானி இளையராஜா கமிட் செய்யப்பட்டார். நான் எழுதிய ஒரு பாடலை இளையராஜா இசையில் வழக்கம் போல டிஎம் சௌந்தர்ராஜன் பாடினார். எம்ஜிஆர் எப்போதுமே தன்னுடைய படங்களின் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். அதனால் பாடல் ரெக்கார்டிங் கம்போஸிங் நடந்தால் அவரே நேரில் வந்து கேட்பார்.

- Advertisement -

அல்லது பாடல் ரிக்கார்டிங் முடிந்த பிறகு அவருக்கு அந்த பாடல் கேசட் அனுப்பி வைக்கப்பட்டு அவரது ஒப்புதல் பெறப்படுவதுதான் அப்போது வழக்கமாக இருந்தது. அப்படி இளையராஜா இசையில் டிஎம்எஸ் பாடிய அந்த பாடல் எம்ஜிஆருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் பாடலை கேட்ட எம்ஜிஆர் திருப்தியாக இல்லை. டிஎம்ஸ் சரியாக பாடவில்லை என்று திருப்பி அனுப்பி விட்டார்.

மீண்டும் ஒருமுறை இளையராஜா அந்த பாடலை டிஎம்எஸ்சை பாட வைத்து அந்த பாடல் கேசட்டையும் எம்ஜிஆருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அந்த முறையும் பாட்டு எம்ஜிஆருக்கு பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார். பாடலில் அவர் எதிர்பார்த்த ஜீவன் இல்லை என்றும் கூறிவிட்டார். வேறு யாராவது பாடகரை பாட வைக்குமாறு கூறிவிட்டார்.

- Advertisement -

அதன்பிறகு மலேசியா வாசுதேவன் அந்த பாடலை பாடி அந்த கேசட்டையும் எம்ஜிஆருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதுவும் பிடிக்கவில்லை என்று எம்ஜிஆர் கூறிவிட்டார். அதற்கு முக்கிய காரணம், அந்த பாடலை அவர் ரெக்கார்டிங் தியேட்டரில் கம்போஸிங்கின் போது இளையராஜா பாடிக் காட்டியதை கேட்டிருக்கிறார். அது அவருக்கு மிகவும் பிடித்துள்ளது. அதனால் அந்த பாடலை இளையராஜாவையே பாடி விடுமாறு எம்ஜிஆர் கூறியிருக்கிறார். ஆனால் இளையராஜா மிகவும் தயங்கியிருக்கிறார்.

அண்ணே என் குரல் உங்களுக்கு சரியாக பொருந்தாது என்றும் கூறியிருக்கிறார். ஆனால் எம்ஜிஆர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு கட்டை குரல் கிடையாது. சரியாக வரும். நீங்களே பாடிடுங்க என்று உறுதியாக சொல்ல இளையராஜாவும் எம்ஜிஆர் பேச்சை தட்ட முடியாமல் அந்த பாடலை பாடினார். அந்த பாடல் இளையராஜா குரலில் எம்ஜிஆருக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆனால் பிறகு சில காரணங்களால் அந்த படம் உருவாகாமல் போய்விட்டது என்று அந்த நேர்காணலில் சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்