- Advertisement -
Homeபொழுதுபோக்குகருணாநிதி 100 விழாவுக்கு விஜய், அஜீத்குமார் வராததற்கு இதுதான் முக்கிய காரணமா, அட இந்த விஷயத்துல...

கருணாநிதி 100 விழாவுக்கு விஜய், அஜீத்குமார் வராததற்கு இதுதான் முக்கிய காரணமா, அட இந்த விஷயத்துல போய் கோட்டை விட்டுட்டாங்களே?

- Advertisement -

கருணாநிதியின் நூற்றாண்டு விழா, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, தனுஷ், வடிவேலு, நயன்தாரா உள்ளிட்ட முக்கிய நடிகர் நடிகையர் பங்கேற்றனர்.

ஆனால் ரஜினிகாந்த் மேடையில் பேசிய போது மேடைக்கு முன் இருந்த பார்வையாளர்கள் 500 பேர் கூட இல்லை என்பதுதான் அவருக்கே சங்கடத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அவர் பேசுகிறார் என்றால் கட்டுக்கடங்காத கூட்டத்தை பார்த்துதான் அவருக்கு பழக்கம். இப்படி காலி சேர்களை பார்த்து ரஜினி பேசியது இதுவே முதல்முறை.

- Advertisement -

தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம், தமிழக அரசு என அனைவரும் கூட்டுமுயற்சியில் உருவாக்கிய இந்த விழாவில் கூட்டம் சேராமல் போனதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் முக்கிய காரணம் தமிழ் சினிமாவில் இன்றைய டாப் ஸ்டார் நடிகர்களான விஜய், அஜீத்குமார் வராததுதான்.

துபாயில் இருந்து இரண்டு தினங்களுக்கு முன்பே அஜீத்குமார் குடும்பத்துடன் சென்னை திரும்பி விட்டார். கோட் பட ஷூட்டிங்கில் இருக்கும் நடிகர் விஜய் சென்னையில் தான் கோவளம் பகுதியில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் உள்ளூரிலேயே இருந்தும் இருவரும் இந்த விழாவுக்கு வரவில்லை.

- Advertisement -

அரசியல் காரணங்களை கடந்தும் விஜய் வந்துவிடுவார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த விஜய் வந்தார். அதுபோல், கருணாநிதி குடும்பத்துக்கும் அஜீத்குமாருக்கும் பெரிய பாரபட்சங்கள் இல்லாத நிலையில் அவரும் வருவதற்கான சாத்தியக்கூறுகளே இருந்தன.

ஆனால் விழா ஏற்பாட்டாளர்கள் செய்த மிக முக்கியத் தவறு, கருணாநிதி 100 விழா அழைப்பிதழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரது பெயர்களை மட்டுமே போட்டுவிட்டு, அஜீத்குமார், விஜய் பெயர்களை தவிர்த்துவிட்டனர். அழைப்பிதழிலேயே மரியாதை நமக்கு தராத இடத்துக்கு நாம் போக வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்று, இருவரும் முடிவெடுத்து சென்னையிலேயே இருந்தும் விழாவை எட்டிப் பார்க்காமல் தவிர்த்து விட்டனர் என்பதுதான் உண்மை.

- Advertisement -

சற்று முன்