- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் போட்டியாளர் மாயாவுக்கு ஹீரோயின் சான்ஸ், இவர்தான் டைரக்டரா? - அப்போ மாயாவுக்கு டபுள் ஜாக்பாட்டா?

பிக்பாஸ் போட்டியாளர் மாயாவுக்கு ஹீரோயின் சான்ஸ், இவர்தான் டைரக்டரா? – அப்போ மாயாவுக்கு டபுள் ஜாக்பாட்டா?

- Advertisement -

விஜய் டிவியில் இப்போது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நடந்து வருகிறது. நாளையுடன் இந்த நிகழ்ச்சி நிறைவடையும் என்று கூறப்படுகிறது. நாளைதான் டைட்டில் வின்னர் யார் என அறிவிக்கப்பட உள்ளார். கடந்த அக்டோபர் 1ம் தேதி துவங்கிய இந்நிகழ்ச்சி பரபரப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.

இந்த சீசனை பொருத்தவரை துவக்கத்தில் இருந்தே வீட்டுக்குள் சண்டை, சச்சரவுகள், கடுமையான வாக்குவாதம், பிரச்னைகள் என டிஆர்பி ரேட்டிங் எகிறும் அளவுக்கு விறுவிறுப்பாக இருந்தது. போதாக்குறைக்கு வார இறுதிநாட்களில் வரும் கமல்ஹாசனும் போட்டியாளர்களுக்கு கொம்பு சீவி விட்டுக்கொண்டே இருந்தார்.

- Advertisement -

பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று அபாண்டமாக பழிசுமத்தி பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்த வெளியேற்றிய கமல், அர்ச்சனாவை சொருகிடுவேன் என்று மிரட்டிய நிக்சனை எச்சரித்ததுடன் அப்படியே விட்டுவிட்டார். அதனால் இந்த முறை கமல்ஹாசனும் மக்களின் விமர்சனத்துக்கு தப்பவில்லை.

இதற்கிடையே விசித்ரா தான் டைட்டில் வின்னர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் வெளியேறி விட்டார். பூர்ணிமாவும் 16 லட்சம் ரூபாய் பணத்துடன் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி விட்டார். இந்த சூழலில் வீட்டுக்குள் இருக்கும் அர்ச்சனா அல்லது மாயா இருவரில் யாரோ ஒருவர்தான் டைட்டில் வின்னர் என்பது விஜய் டிவி பார்வையாளர்களிடையே பரபரப்பாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் பிக்பாஸ் துவக்கத்தில் இருந்தே மிக அதிகமாக கவனிக்கப்பட்ட போட்டியாளர் மாயா. அவர் மீது பலவிதமான சர்ச்சையான புகார்கள் எழுந்துக்கொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் மாயாவுக்கு கமல்ஹாசன் ஆதரவாக இருக்கிறார். நிகழ்ச்சியில் மாயாவுக்கு மட்டுமே பேச வாய்ப்பளிக்கிறார் என்றெல்லாம் புகார்கள் எழுந்தன.

இதற்கிடையே பிக்பாஸ் வின்னராக மாயா அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் மாயாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மாவீரன், வெந்து தணிந்தது காடு, ஜவான் ஆக்‌ஷன் ஒளிப்பதிவாளராக யன்னிக் பெக் டைரக்ட் செய்யும் படத்தில் மாயா கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. மாயா ஏற்கனவே விக்ரம், லியோ படத்தில் சில காட்சிகளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்