- Advertisement -
Homeபொழுதுபோக்குஅருண் விஜய் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வரவேற்பு, 3 நாட்களில் இவ்வளவு கோடி...

அருண் விஜய் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வரவேற்பு, 3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா? – முட்டுக்கட்டையாக வந்தாராதனுஷ்?

- Advertisement -

பொங்கலுக்கு இப்போது அயலான், கேப்டன் மில்லர் படங்கள் ரிலீஸ் ஆனது மட்டுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. ஆனால் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள மிஷன் சாப்டர் 1 படமும் இப்போது, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவான இந்த படத்தில், அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல் என நடித்துள்ளனர். இந்த படம் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால் அயலான், கேப்டன் மில்லர் படங்கள் பெரும்பாலான ஸ்கிரீன்களை ஆக்கிரமித்துக்கொண்டதால் இந்த படத்துக்கு போதிய ஸ்கிரீன் கிடைக்கவில்லை.

- Advertisement -

அதாவது பெரும்பாலான ஊர்களில் மிஷன் படம் ரிலீஸ் ஆகவில்லை. அப்படியே ரிலீஸ் ஆன தியேட்டர்களிலும் காலை காட்சி மற்றும் இரவு காட்சி மட்டுமே இருக்கிறது. பகல் மற்றும் மாலை நேர காட்சி இல்லாததால், இந்த படம் பார்க்க வரும் பலரும், அயலான் அல்லது கேப்டன் மில்லர் படத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அருண் விஜய் நடித்த மிஷன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வழக்கமான அவரது படங்களை போல இல்லாமல், இது கதை, திரைக்கதை விஷயத்தில் விஜய் இயக்கத்தில் இந்த படம் ஒரு மாறுபட்ட கோணத்தில் அருண் விஜய்க்கு பாசிட்டிவ் விமர்சனத்தை தந்து வருகிறது.

- Advertisement -

சில நேரங்களில் நல்ல கதையம்சம் உள்ள கதைகள், நல்ல படங்களாக உருவாகி ரிலீஸ் ஆகும் போது, கமர்ஷியல் ஹீரோக்கள் தரும் தரமற்ற படங்களால், நல்ல படங்கள் ரசிகர்களின் பார்வைக்கு கிடைக்காமல் போகிறது. இப்போது அயலான் படம் கூட குடும்பத்துடன் பார்த்து கழிக்க வேண்டிய பொழுதுபோக்கு படமாக இருக்கலாம்.

ஆனால் கேப்டன் மில்லர் போன்ற படங்களை சிலர், தாறுமாறாக விமர்சிக்கின்றனர். படம் முழுக்க துப்பாக்கி சுடும் காட்சிகள், வன்முறை என இந்த படத்தில் எதுவுமே இல்லை. பெரிய ஆடம்பரமும், மேக்கிங் திறமையும் காட்ட ஒரு படம் ரசிகர்களுக்கு அவசியம்தானா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, இந்த மிஷன் பார்ட் 1 படம், இதுவரை 4 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்