- Advertisement -
Homeபொழுதுபோக்குநாம கால் வைக்கிற எடமெல்லாம் கன்னி வெடியா இருக்குதே, நயன்தாரா மைண்ட் வாய்ஸ் இதுவாக தான்...

நாம கால் வைக்கிற எடமெல்லாம் கன்னி வெடியா இருக்குதே, நயன்தாரா மைண்ட் வாய்ஸ் இதுவாக தான் இருக்குமோ, திடீரென அந்த படத்தில் இருந்து விலகல் ஏன்?

- Advertisement -

நடிகை நயன்தாராவுக்கு எந்த பக்கம் திரும்பினாலும், ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதே வழக்கமாகி விட்டது. இப்போது அவரது பஞ்சாயத்துதான் தயாரிப்பாளர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் அவரது சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.

அன்னபூரணி படத்தில், தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய காட்சிகளில் அவர் நடிக்க அது இப்போது வில்லங்கமாக மாறி இருக்கிறது. பிராமண பெண் கேரக்டரில் நடித்துவிட்டு, கடைசி காட்சியில் தொழுகை நடத்தியது, மும்பை போலீசில் புகார் தெரிவிக்கும் அளவுக்கு சென்றது.

- Advertisement -

இப்போது ராமர் சீதை, அசைவம் சாப்பிட்டனர் என்று கூறும் வசனங்கள் இடம்பெற்றதால், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்தும் படம் நீக்கப்பட்டு விட்டது. மீண்டும் படத்தை தராவிட்டால், தயாரிப்பாளர் தரப்பில், ரூ. 12 கோடியை திருப்பித் தருமாறு நெட்பிளிக்ஸ் கேட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் இனிமேல் படங்களை வாங்கும் ஓடிடி தளங்கள், இதுபோன்ற சிக்கல் ஏற்பட்டால், உரிமம் பெற படத்துக்காக கொடுக்கப்பட்ட மொத்த தொகையையும் திருப்பித் தர, படத்தயாரிப்பாளர்களுக்கு புது நிபந்தனை விதிக்க முடிவு செய்துள்ளது.

- Advertisement -

இதற்கிடையே எல்ஐசி பட டைட்டில் பஞ்சாயத்துக்கும் ஒருபுறம் மிக வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் டைட்டில், பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி ( லைப் இன்சூரன்ஸ் கார்பரேசன்) பெயரை பயன்படுத்துவதாக கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்துக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தன் ராசிதான் காரணமோ என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. இந்த படத்தில் இருந்து நயன்தாரா விலகியது உறுதியாகி உள்ளது. இதில் அவர், பிரதீப் ரங்கநாதனுக்கு அக்கா கேரக்டரில் நடிக்கவில்லை. அதேவேளையில் இந்த படத்தில் அப்பா கேரக்டரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் நடிகர், இயக்குநர் சீமான் நடிப்பது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்