- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குநர் வெங்கட்பிரபு மீது கடும் அதிருப்தியில் நடிகர் விஜய், கோட் ஷூட்டிங் ஸ்பாட்டில் தொடரும்...

இயக்குநர் வெங்கட்பிரபு மீது கடும் அதிருப்தியில் நடிகர் விஜய், கோட் ஷூட்டிங் ஸ்பாட்டில் தொடரும் அந்த விஷயம் – தளபதியை இப்படி கடுப்பேத்தறாங்களே?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில், கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்துக்கு விஜய் சம்பளம் ரூ. 200 கோடி என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங், கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பட பூஜையுடன் துவங்கியது. சென்னை, ஐதராபாத், துருக்கி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இப்போதும் சென்னையில் நடந்து வரும் ஷூட்டிங்கில் விஜய் பங்கேற்று நடித்து வருகிறார்.

- Advertisement -

வரும் 23ம் தேதிக்கு பிறகு ஒரு வாரம் படப்பிடிப்புக்கு பிரேக்கப் விடப்படுகிறது. அதன்பின்பு பிப்ரவரி முதல் வாரத்தில் மீண்டும் படக்குழு துருக்கி செல்கிறது. பிறகு ராஜஸ்தான், இலங்கை, இஸ்தான்புல் என படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் ஷூட்டிங்கை முழுமையாக முடித்துவிட்டு, போஸ்ட் புரடக்சன் பணிகளை துவக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

இயக்குநர் வெங்கட்பிரபுவை பொருத்தவரை ஜாலியான ஒரு பேர்வழி. படப்பிடிப்பை கூட ஒரு கல்லூரி வகுப்பறை போல ஜாலியாக மாற்றிவிடும் இயக்குநர். ஏனெனில் அவரது படத்தில் நடிப்பவர்கள் அனைவருமே அவரது நெருங்கிய நண்பர்கள்தான். அவரது படப்பிடிப்பே, ஒரு பிக்னிக் போல, டூர் சென்றது போன்ற உணர்வை தான் தரும்.

- Advertisement -

ஆனால் நடிகர் விஜயை பொருத்தவரை மிகவும் சின்சியர், சீரியஸாக பணி செய்பவர். படப்பிடிப்பு தளத்தில் விளையாட்டாக இருப்பது அவரது கேரக்டர் அல்ல. அவரை பொருத்தவரை படப்பிடிப்பு வேகமாக நடக்க வேண்டும். அந்தந்த காட்சிகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும். ஆனால், வெங்கட்பிரபு அதற்கு நேர்மாறாக, மிக மெதுவாக செயல்படுவதும் படப்பிடிப்பை அடிக்கடி தாமதப்படுத்துவதும் விஜயை கடுப்பேற்றி வருகிறது.

குறிப்பாக ஐதராபாத், துருக்கி, சென்னை என மாற்றி மாற்றி படப்பிடிப்புக்காக சென்றுவரும்போது இடையிடையே ஒரு வாரம், 10 நாள் இடைவெளி விடுவதை விஜயால் ஏற்றுக்கொள்ளவோ, சகித்துக்கொள்ளவோ முடிவதில்லை. அதனால் வெங்கட்பிரபுவிடம், படப்பிடிப்பை, வேலைகளை ஸ்பீடு பண்ணுங்க. இவ்வளவு ஸ்லோவாக இருக்காதீங்க. படப்பிடிப்பை இன்னும் வேகப்படுத்துங்க என நேரடியாகவே சொல்லி இருக்கிறார். ஆனால் அப்போதும், ஸ்லோமோஷனில் வெங்கட்பிரபு டைரக்ட் செய்து, விஜயை அப்செட் செய்து வருவதாக படக்குழுவினர் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்