- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத் உடன் அந்த கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்ட விஜய் - விஜயுடன் நடிக்காதது ஏன்...

அஜீத் உடன் அந்த கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்ட விஜய் – விஜயுடன் நடிக்காதது ஏன் என்பது பற்றி மனம் திறந்து பேசிய அஜீத்குமார்

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக கடும் போட்டியாளர்களாக இருப்பவர்கள் விஜய் – அஜீத்குமார். முன்னணி டாப் ஸ்டார் நடிகர்களான அவர்கள், தொழில் போட்டி இல்லாமல் செயல்பட்டாலும் ரசிகர்கள் அவர்களை அவ்வாறு இருக்க விடுவதில்லை. தொடர்ந்து ஒவ்வொரு படம் ரிலீஸின் போது எந்த படம் அதிக வசூல் என சமூக வலைதள பக்கங்களில் சண்டை போட்டுக்கொள்கின்றனர்.

ஆரம்ப காலத்தில் விஜய் – அஜீத்குமார் இருவரும் சில படங்களில் நடித்திருந்த சமயத்தில் இருவரும் ஒன்றாக ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்திருந்தனர். இருவரும் நண்பர்களாக அந்த ஒரு படத்தில் நடித்த நிலையில், மீண்டும் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்கவில்லை. ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை.

- Advertisement -

ஒருவேளை அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தால், விஜய் – அஜீத்குமார் இன்னும் சில படங்களில் ஒன்றாக நடித்திருக்க கூடும். ஆனால் படம் வெற்றி பெறாததால் மீண்டும் அவர்கள் ஒன்றாக நடிக்க வாய்ப்பின்றி போய்விட்டது. ஆனால் இதே போல் ஒரு காலகட்டத்தில் ரஜினி- கமல் ஒன்றாக நடித்த போது அது சக்சஸ் ஆனதால் பல படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

இப்போது விஜய், அஜீத்குமார் இருவருமே சம உயரத்தில் வளர்ந்து நிற்கின்றனர். இருவரும் ஒன்றாக நடித்தால் நன்றாக இருக்கும் என்பது சில தயாரிப்பாளர்கள். இயக்குநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் பட்சத்தில் இவர்களை எப்படி ஒன்றாக சேர்ந்து நடிக்க வைப்பது, அப்படி நடித்தால், இருதரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா, என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் அஜீத்குமார் நடித்த மங்காத்தா படத்தை பார்த்த நடிகர் விஜய், அதில் அர்ஜூன் நடித்த கேரக்டரில் நடிக்க என்னை அழைத்திருந்தால் நடித்திருப்பேன் என்று அந்த படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் கூறியிருக்கிறார். இதை ஒரு நேர்காணலில் வெங்கட்பிரபு வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இதுபற்றி பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அஜீத்குமார், விஜயுடன் நான் சேர்ந்து நடிப்பது குறித்து, முதலில் என் ரசிகர்கள் ஆசைப்பட வேண்டும். இருவரும் சேர்ந்து நடிக்கும்படியான கதை அமைய வேண்டும். அந்த கதை, நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டிய ஒரு டிமாண்ட் ஏற்படுத்துமானால் நான் கண்டிப்பாக விஜயுடன் நடிப்பேன் என்று அஜீத்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்