நடிகை விசித்ரா, கடந்த 1990களில் பல படங்களில் நடித்தவர். வில்லாதி வில்லன், அமைதிப்படை, முத்து, பெரிய குடும்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். காமெடி ரோல்கள் மற்றும் சின்ன சின்ன கேரக்டர்களில் மட்டுமே நடித்த விசித்ரா, கதாநாயகியாக தமிழில் படங்களில் நடிக்கவில்லை. எனினும் சில படங்களில் நடித்தாலும், விசித்ரா ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகையாகவே இருந்தார்.
ஒரு கட்டத்துக்கு பிறகு, தமிழ் சினிமாவில் விசித்ராவை காண முடியவில்லை. திருமணம் செய்து கேரளாவில் செட்டிலாகி விட்டார் என கூறப்பட்டது. இந்த சூழலில், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் விசித்ரா கலந்துக்கொண்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் சமையல் போட்டியாளராக பல வாரங்கள் நீடித்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி துவங்கியது. இதில் போட்டியாளராக அவர் கலந்துக்கொண்டார். துவக்கத்தில் இருந்தே பிக்பாஸ் வீட்டுக்குள் விசித்ரா நடந்துக்கொண்ட விதம் பார்வையாளர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனது. மிகவும் பக்குவமாக பல விஷயங்களை அவர் கையாண்ட விதம் காரணமாக, ரசிகர்கள் மத்தியில் அவர் மீது நல்ல மரியாதை ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த பூகம்ப விஷயங்கள் பற்றி சொல்ல வேண்டும் என பிக்பாஸ் டாஸ்க் வைக்க, அப்போது மலம்புழாவில் தன்னை ஒரு தெலுங்கு நடிகர் ரூமுக்கு அழைத்த விஷயத்தையும், அவரால் பல மிரட்டல்களுக்கு ஆளானது, அப்போதைய நடிகர் சங்கத் தலைவரிடம் புகார் சொன்ன போது மறுத்தது என பல விஷயங்களை விசித்ரா கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அடுத்த சில மணி நேரங்களில் இந்த விவரங்களை நெட்டிசன்கள் குடைத்து, விசித்ரா சொன்ன தகவல்களை வைத்து அந்த தெலுங்கு நடிகர் பாலய்யா என்கிற பாலகிருஷ்ணன், படத்தின் பெயர் பாலவடிவி பாசு, கன்னத்தில் அறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் எல் விஜய். புகாரை விசாரிக்க மறுத்த நடிகர் சங்க தலைவர் ராதாரவி என்ற விவரங்களை, சோஷியல் மீடியாவில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற விசித்ரா, லட்சக்கணக்கான மக்களை இந்த விஷயம் சென்று சேர வேண்டும் என்பதற்காக தான் நான் பிக்பாஸில் அதுபற்றி சொன்னேன். நான் யார் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லாமலேயே அக்குவேர், ஆணிவேராக எல்லா விஷயங்களையும் பிரித்து எடுத்துவிட்டனர். அவர்கள் அப்படி எடுப்பார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் நான் பெயர்களை குறிப்பிடாமல் சொன்னேன். அது நிஜமான சம்பவம். என் வாழ்க்கையில் இன்னும் கருப்பு புள்ளியாக இருக்கிறது என்று விசித்ரா கூறியுள்ளார்.





