- Advertisement -
Homeபொழுதுபோக்குகோட் படப்பிடிப்பை இலங்கையில் நடத்துவதில் ஏற்பட்ட திடீர் சிக்கல் - இலங்கையில் அப்படி ஒரு சம்பவம்...

கோட் படப்பிடிப்பை இலங்கையில் நடத்துவதில் ஏற்பட்ட திடீர் சிக்கல் – இலங்கையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தால் விஜய்க்கு தான் ஆபத்து

- Advertisement -

நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குகிறார். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோட் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு, விஜய் அடுத்து ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிக்க இருக்கிறார். அந்த படத்தை முடித்துவிட்டு தனது தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சியில், முழு நேர அரசியல்வாதியாக, வரும் 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ள, இன்னும் ஒரு படம் மட்டுமே நடிப்பது என முடிவெடுத்து இருக்கிறார்.

- Advertisement -

நடிகர் விஜயை பொருத்தவரை, அரசியலில் முழு கவனம் செலுத்த வேண்டுமெனில், அரசியலில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். மீண்டும் சினிமாவில் நடிக்க கூடாது. சினிமா சார்ந்த விஷயங்களில் ஈடுபடக் கூடாது. அதனால் தனது அரசியல் பிம்பம் உடைவது, மக்கள் மத்தியில் வேறு மாதிரியான இமேஜை ஏற்படுத்தும் என கருதுகிறார்.

விஜய் நடிக்கும் கோட் படத்தின் படப்பிடிப்பு, இதுவரை சென்னை, புதுச்சேரி, துருக்கி, ஐதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் நடந்திருக்கிறது. படத்தின் பெரும்பான்மையாக காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், இன்னும் கிளைமேக்ஸ் மட்டுமே பாக்கியாக உள்ளது. அதுவும் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எடுக்கப்பட உள்ளதால், இங்கை சென்று அங்குள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஒரு புது விவகாரம் தலைதூக்கியுள்ளது. இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர், இலங்கையில் நடிகர் விஜயை சந்திக்க ஆர்வமாக உள்ளார்கள். அங்குள்ள தமிழ் அமைச்சர் ஜீவன் தொண்டைமான் மூலம் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவது தெரிய வந்துள்ளது. இலங்கை சென்றால், நிச்சயம் ராஜபக்சே சந்திப்பை விஜய் தவிர்க்க முடியாது என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை விஜய் சந்திப்பது, அவரது அரசியல் எதிர்காலத்தை கண்டிப்பாக பாதிக்கும். மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அவரை சந்திக்காமல் தவிர்ப்பதே அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நன்மையாக அமையும் என்பதால், இலங்கையில் கோட் படம் ஷூட்டிங்கை தவிர்த்துவிட்டு, வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டிய நிலை, கோட் படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்