நடிகர் விஜய், இப்போது நடித்துவரும் படம் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை வெங்கட்பிரபு டைரக்ட் செய்து வருகிறார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
அப்பா, மகன் என்ற இரட்டை ரோலில் விஜய் நடிக்கும் இந்த படத்தில் மீனாட்சி சௌத்ரி, சிநேகா, ரம்யாகிருஷ்ணன், பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், வைபவ், அஜ்மல், சுதீப், கஞ்சா கருப்பு, கனிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நட்சத்திர நடிகர்களாக இருப்பதால், படம் வேற லெவலில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
விஜய் இப்போது பெரிய ஸ்டாராக உள்ள நிலையில், திடீரென அரசியல் கட்சி துவங்கியதாக அறிவித்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளுமே தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்துவரும் நிலையில், புதியவரான விஜய் வரவை பலரும் வரவேற்க தயாராகி விட்டனர்.
இந்த வரவேற்பின் பிரதிபலிப்பு, கண்டிப்பாக வருகிற 2026 சட்டசபை தேர்தலில் வெளிப்படும். அடுத்த முதல்வராக விஜய் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நடிகர் விஜயகாந்துக்கே அப்படி ஒரு வாய்ப்பை தர தமிழக மக்கள் முன்வந்த நிலையில், கூட்டணி கட்சிகளாலும் அவரது உடல்நல பாதிப்புகளாலும் அது நடக்காமல் போய் விட்டது.
நடிக்க வந்த ஆரம்ப கட்டத்தில் செந்தூரப்பாண்டி என்ற படம் மூலம், விஜய்க்கு நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தார் விஜயகாந்த். அப்படிப்பட்ட விஜயகாந்துக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுக்கு, தனது படத்தில் நடிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.
ஆனால் கேப்டன் விஜயகாந்துக்கே உரிய மரியாதை செய்ய ஐடியா செய்து, அதை செயல்படுத்தி இருக்கிறார் விஜய். அதாவது இப்போது அவர் நடித்து வரும் கோட் படத்தில், ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜய், விஜயகாந்த் நடிக்கும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரமேலதாவிடம் பேசி சம்மதமும் வாங்கி விட்டனர். ஆனால், நாங்கள் பார்த்து ஓகே சொன்ன பிறகே, அந்த காட்சிகளை திரையில் அனுமதிப்போம் என்று, பிரேமலதா கூறியதாகவும் தெரிய வந்துள்ளது. விஜய்க்கு, விஜயகாந்துக்கு செய்த இந்த மரியாதை, படம் வந்த பிறகு பெரிய அளவில் பேசப்படும் என்று கூறப்படுகிறது.





