சிம்புவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. ஆனால் இன்னும் சிம்பு பேச்சுலராகவே சுற்றிக்கொண்டிருக்கிறார். சிம்பு ஆரம்பகட்டத்தில் சினிமா துறையில் மன்மதனாகவே வலம் வந்தார். நயன்தாரா, ஹன்சிகா போன்ற நடிகைகளுடன் காதல் வயப்பட்ட சிம்பு, அதன் பின் நடுவில் காதல் தோல்வியால் விரக்தி நிலைக்கு சென்று சினிமாவில் கோட்டை விட்டார். எனினும் “ஈஸ்வரன்”, “மாநாடு” ஆகிய திரைப்படங்களின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

சிம்பு எந்த பேட்டியில் கலந்துகொண்டாலும் அவரிடம் “உங்களுக்கு எப்போது திருமணம்?” என்ற கேள்வியை கேட்காத நிருபர்களே இல்லை. அதே போல் அவரது தந்தையான டி.ராஜேந்தரிடமும் “சிம்புவுக்கு எப்போது திருமணம்?” என்ற கேள்வி நிச்சயம் இடம்பெறும். ஆனாலும் இது குறித்த தெளிவான பதிலை இருவருமே கூறியது இல்லை.
இந்த நிலையில் பிரபல திரை விமர்சகரான வித்தகன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சிம்புவுக்கு திருமணம் ஆகாதது குறித்த காரணம் ஒன்றை கூறியுள்ளார்.

அதாவது சிம்பு தான் காதலித்த நடிகைகளுள் ஒருவரை திருமணம் செய்துகொள்ளலாம் என இருந்தாராம். அந்த திருமணத்திற்கு டி.ராஜேந்தரும் ஓகே சொல்லியுள்ளார். ஆனால் சிம்பு அந்த நடிகையிடம் ஒரு கண்டிஷன் போட்டாராம்.
அதாவது திருமணத்திற்கு பிறகு சினிமாக்களில் நடிக்க கூடாது என்று கூறினாராம். இதனால் அந்த நடிகை சிம்புவை பிரேக்கப் செய்துவிட்டாராம். இவ்வாறு ஒரு தகவலை அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த நடிகை சமீபத்தில்தான் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. சிம்பு மட்டும் அன்று அந்த கண்டிஷனை போடவில்லை என்றால் என்றோ அவருக்கு அந்த நடிகையுடன் திருமணம் நடந்திருக்கும் என்பதாக தெரிய வருகிறது.





