- Advertisement -
Homeபொழுதுபோக்குஓடிடி தளங்களில் நேரடியாக ரிலீஸ் ஆகும் படங்களில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள்...

ஓடிடி தளங்களில் நேரடியாக ரிலீஸ் ஆகும் படங்களில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள் லிஸ்ட் – அதிலும் தமிழ் நடிகைதான் முதலிடம்!

- Advertisement -

முதலில் சினிமா தியேட்டர்களை மட்டுமே நம்பி இயக்குநர்கள் படம் எடுத்தனர். தயாரிப்பாளர்கள் படங்களை தயாரித்தனர். இப்போதும் அப்படித்தான் நிலைமை இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் தியேட்டர்களை நம்பாமல் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை ரிலீஸ் செய்யவும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. அப்படியும் பல படங்கள் தியேட்டர்களுக்கு வராமல், நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜி 5, சன் நெக்ஸ்ட், டிஸ்னி ஹாட் ஸ்டார், சோனி லிவ் போன்ற பல முக்கிய ஓடிடி தளங்கள் இருக்கின்றன. இந்த ஓடிடி தளங்கள் வாயிலாக, படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் தியேட்டரில் ரிலீஸ் ஆன படங்கள், குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு திரையிடப்படுகிறது. சில படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

- Advertisement -

அதாவது தமிழில் ஒரு புதிய படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன நிலையில் 4 வாரங்கள், அதாவது 28 நாட்களுக்கு பிறகு ஓடிடி தளத்தில் திரையிடப்படுகிறது. இதேபோல் மும்பையில் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் புதிய படங்கள் 8 வாரங்கள், அதாவது 56 நாட்களுக்கு பிறகு அந்த படம் திரையிடப்படுகிறது. இந்த ஒப்பந்த அடிப்படையில் ஓடிடி தளங்களுக்கு படங்கள் விற்கப்படுகின்றன.

தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல், நேரடியாக ஓடிடி தளங்களில் விற்கப்படும் படங்களுக்கு, மொத்த தொகையும் விலையாக கொடுத்து பெறப்படுகின்றன. சில நேரங்களில் ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றன. இந்த படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் விட்டோமே என, ஏமாற்றமடையும் அளவுக்கு அந்த படங்கள் சிறந்த படைப்புகளாக இருக்கின்றன.

- Advertisement -

இப்போதெல்லாம் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முன்பே, ஓடிடி தளங்களில் கணிசமான தொகைக்கு தயாரிப்பாளர்கள் படத்தை விலை பேசி விடுகின்றனர். இது ஒரு விதத்தில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை தருகிறது. ஏனெனில் 4 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் பார்த்துக்கொள்ளலாம் என, பெரும்பாலான ரசிகர்கள், தியேட்டர்களுக்கு வருவதே இல்லை.

இந்நிலையில் ஓடிடியில் நேரடி ரிலீஸ் செய்யப்படும் படங்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதில் முதலிடத்தில் தமிழ் நடிகை சமந்தா இருக்கிறார். இதில் ஓடிடி படங்களில் சம்பளமாக சமந்தா ரூ. 10 கோடி, ராதிகா ஆப்தே ரூ. 4 கோடி, சுஷ்மிதா சென் ரூ. 2 கோடி, ராஷிக்கண்ணா ரூ. 1.5 கோடி, பிரியாமணி ரூ. 20 லட்சம் பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மற்ற முக்கிய நடிகைகளான நயன்தாரா, ராஷ்மிகா மந்தனா, திரிஷா போன்றவர்களின் விவரம் தெரியவில்லை.

- Advertisement -

சற்று முன்