- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமார் படத்துக்கே இப்படி ஒரு நிலைமையா?, விடாமுயற்சி படப்பிடிப்பு என்னதான் ஆச்சு? - லேட்டஸ்ட்...

நடிகர் அஜீத்குமார் படத்துக்கே இப்படி ஒரு நிலைமையா?, விடாமுயற்சி படப்பிடிப்பு என்னதான் ஆச்சு? – லேட்டஸ்ட் அப்டேட் தெரிஞ்சுக்குங்க!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் துணிவு படத்துக்கு பிறகு நடித்து வரும் படம்தான் விடாமுயற்சி. 2023ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு துணிவு படம் ரிலீஸ் ஆனது. அதற்கு பின், 2024ம் ஆண்டு பொங்கல் கடந்தும் அஜீத் படம் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால், கடந்த அக்டோபர் மாதமே விஜய் நடித்த படம் லியோ ரிலீஸ் ஆனது.

ஏனெனில் கடந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜீத் குமார் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு இரண்டு படங்களும் பண்டிகை கால படங்களாக ஒன்றாக தான் ரிலீஸ் ஆனது. ஆனால் விஜய் படம் வந்து 5 மாதங்களாகியும் அஜீத் படம் வரவில்லை. அதுமட்டும் அல்ல, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை.

- Advertisement -

இப்போது விஜய் நடித்து வரும் படம் கோட். இந்த படத்தை வெங்கட்பிரபு டைரக்ஷன் செய்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் கோட் படப்பிடிப்பு துவங்கிய அதே மாதத்தில் விடாமுயற்சி ஷூட்டிங்கும் அஜர்பைஜானில் துவங்கியது. கோட் படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், விடாமுயற்சி படம் இன்னும் பல நாட்கள் ஷூட்டிங் மீதம் உள்ள நிலையில், பல வாரங்களாக படப்பிடிப்பு நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

துணிவு படத்துக்கு பிறகு விடாமுயற்சி படத்தை முதலில் இயக்குவதாக இருந்தது இயக்குநர் விக்னேஷ் சிவன்தான். அவரை வேண்டாம் என மறுத்துவிட்டு, கடைசி நேரத்தில் இயக்குநர் மகிழ் திருமேனியை இயக்க வைத்தார் அஜீத்குமார். பின்னர், படப்பிடிப்பை துவங்க பலவிதமான இடையூறுகள் ஏற்பட்ட நிலையில் பல மாதங்கள் தாமதமாக படப்பிடிப்பு துவங்கியது.

- Advertisement -

படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே பனிப்பொழிவு, மணல் புயல், சூறாவளி, கனமழை என பலவித இயற்கை சீற்றங்களால் விடாமுயற்சி படப்பிடிப்பு பலமுறை, அஜர்பைஜானில் தடைபட்டது. அதனால் படக்குழு அடிக்கடி சென்னை வந்து முகாமிட்டு திரும்பிச் சென்றது. அதே போல் படப்பிடிப்பை நடத்த முடியாமலும் அங்கு பல நாட்கள் படக்குழு சும்மா இருந்ததால், லைகா புரடக்சன் தயாரிப்பு நிறுவனத்துக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.

இந்நிலையில் அஜீத்குமார் ரசிகர்கள் பலரும், விடாமுயற்சி அப்டேட் என்ன என்ன என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த படத்தின் படப்பிடிப்பு இப்போதைக்கு நகர வாய்ப்பில்லை. ஏனெனில் நிதி பிரச்சனையில் லைகா நிறுவனம் தாமதிப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், லேட்டஸ்ட் அப்டேட் என்ன வென்றால், விடாமுயற்சி படம் பற்றிய எந்த அப்டேட்டும் இல்லை என்பதுதான். கடைசியில் அஜீத்குமார் படத்துக்கே இப்படி ஒரு நிலைமையா, என பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்