- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்குகிற சத்யஜோதி பிலிம்ஸ் படம் - கதாநாயகன் இவரா? - வேற...

விஜயை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்குகிற சத்யஜோதி பிலிம்ஸ் படம் – கதாநாயகன் இவரா? – வேற லெவல் சம்பவமாக இருக்குதே?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வருகிற படம் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இன்னும் இரண்டு ஷெட்யூல் மட்டுமே படப்பிடிப்பு பாக்கியுள்ளது. கிளைமேக்ஸ் உள்ளிட்ட முக்கிய காட்சிகள், ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளன.

கோட் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். டைம் டிராவல் அடிப்படையாக கொண்ட இந்த கதையில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார். பிரசாந்த், பிரபுதேவா, சுதீப், கஞ்சா கருப்பு, சிநேகா, மீனாட்சி சவுத்ரி, கனிகா, லைலா, ரம்யாகிருஷ்ணன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது.

- Advertisement -

இந்த படத்தை முடித்த பிறகு நடிகர் விஜய், ஏப்ரல் மாதத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார். அதனால் கோட் படத்தின் அனைத்து போஸ்ட் புரடக்சன் பணிகளையும் வெங்கட்பிரபு கவனித்துக்கொள்கிறார். அதன்பிறகு படத்தின் விஎப்எக்ஸ் பணிகள், டீ ஏஜிங் பணிகள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்க இருக்கிறது. இதை கவனித்துக்கொள்ள, நேரடி செல்ல லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லவும் வெங்கட்பிரபு திட்டமிட்டிருக்கிறார்.

நடிகர் விஜய் படத்தை இயக்குவதற்கு முன், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்கான ப்ரீ புரடக்சன் பணிகளில் வெங்கட்பிரபு ஈடுபட்டு இருந்தார். அப்போது நடிகர் விஜயிடம் இருந்து வெங்கட்பிரபுவுக்கு திடீரென அழைப்பு வந்து, தன் படத்தை இயக்குமாறு விஜய் கேட்டுக்கொண்டார். அதற்கு சத்யஜோதி பிலிம்ஸ் உடனே அனுமதி வழங்கியது.

- Advertisement -

இதற்கு காரணம், இப்போது உள்ள தமிழ் சினிமா மார்க்கெட் நிலவரப்படி, நடிகர் விஜய் படத்தை இயக்கிய பின், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கட்பிரபு படத்தை இயக்கினால், இன்னும் படத்துக்கு கூடுதல் மதிப்பும், அதிக பிஸினஸ் வாய்ப்பும் கிடைக்கும் என்பதால்தான் உடனே என்ஓசி தந்து, விஜய் படத்தை இயக்கி விட்டு வாங்க என வெங்கட்பிரபுவை அனுப்பி வைத்தது.

இந்நிலையில், கோட் படத்தை முடித்த பிறகு வெங்கட்பிரபு அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் படம் இயக்க உள்ளார். இந்த படத்தை பெரிய அளவில் பான் இந்தியா படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பவர் சிவகார்த்திகேயன். அவர் இன்னும் சம்பளம் பேசாமல் இருக்கிறார். முதலில் இந்த கதையில் சுதீப் நடிப்பதாக இருந்த நிலையில், சிவகார்த்திகேயன் மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்